Skip to main content

அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க.


அ.தி.மு.க. கூட்டணியில். விஜயகாந்தின் தே.மு.தி.க. சேருமா? என்று கடந்த சில மாதங்களாக நிலவி வந்த செய்திக்கு இன்று முற்றுப்புள்ளி விழுந்திருக்கிறது. ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு தே.மு.தி.க. நிர்வாகிகள் வந்து கூட்டணி உறுதி செய்தனர்.


தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம் பெறும் வகையில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் அ.தி.மு.க. அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அப்போது அ.தி.மு.க. சார்பில் சார்பில், தொகுதி பங்கீட்டுக் குழு உறுப்பினர்களான, பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில், அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன், பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன், இளைஞர் அணிச் செயலாளரும் விஜயகாந்தின் மச்சானுமான எல்.கே. சுதீஷ் ஆகியோர் பங்கு பெற்றனர்.

பேச்சுவார்த்தை முடிந்த பிறகு பண்ருட்டி ராமசந்திரன் பேட்டி அளித்தார். அ.தி.மு.க.வுடன் இணைந்து தொகுதிகளை பங்கீட்டு தேர்தலை சந்திக்க முடிவு செய்திருக்கிறோம். அது தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்திருக்கிறது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்." என்றார்.

கேள்வி: கூட்டணி மந்திரி சபை பற்றி பேசினீர்களா?

பதில்: ஏற்கனவே அதை நாங்கள் தெளிவு படுத்தி விட்டோம். தி.மு.க. ஆட்சி விரட்டி அடிக்கப்பட வேண்டும் அது ஒன்றுதான் முதல் குறிக்கோள். மக்கள் விருப்பத்திற்கு இணங்க அ.தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்திருக்கிறோம்.

கேள்வி: மக்களுடனும் தெய்வத்துடன்  தான் கூட்டணி என்று விஜயகாந்த் சொல்லி வந்த நிலையில் அ.தி.மு.க.வோடு எப்படி கூட்டணி சேர்ந்தீர்கள்?

பதில்:  தி.மு.க. ஆட்சி தொலைய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்ப்பார்ப்புக்கு வடிவம் கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து தி.மு.க.வை வீழ்த்த முடிவு செய்தோம். தெய்வத்தின் ஆசியும் அதுதான்

Comments

தி.மு.க ஜெயிப்பது கஷ்டம் தான்..

Popular posts from this blog

ஸ்பெக்ட்ரம் பலூன் 'புஸ்" ஆகி விடும்: வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இன்று (டிசம்பர் 22) வெளியிட்ட அறிக்கை: தொலைத்தொடர்புத் துறையின் தற்போதைய அமைச்சர் கபில்சிபல் நேற்றிரவு தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பல்வேறு திடுக்கிடக் கூடிய தகவல்களை ஆணித்தரமான முறையில் விளக்கியுள்ளார்.1999ம் ஆண்டில் - பாரதீய ஜனதா ஆட்சியில், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் - கடைப்பிடிக்கப்பட்டதொலைத்தொடர்பு கொள்கையினால், மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகை ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடியாகும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு சம்பந்தமாக இந்த இழப்பு - இது இப்போது சொல்லப்படுவது போன்ற கற்பனையின் அடிப்படையில் சொல்லப்படும் தொகை அல்ல; நடைமுறைக் கணக்குப்படி ஏற்பட்ட இழப்புத் தொகையாகும்.

பதவியைவிட கொள்கைகளே முக்கியம்: கி.வீரமணி

கலைஞர் எடுத்த - வரலாற்றில் இடம் பெறும் முக்கிய அரசியல் முடிவை உள்ளூர் தமிழர்கள் முதல் உலகத் தமிழர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். பதவிகளை விட கொள்கையே முக்கியம் என்ற ரீதியில் தி.மு.க.வின் திட்டம் அமைய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.