Skip to main content

2006 தேர்தல்: திண்டிவனத்தாரை கழற்றிவிட்ட போயஸ் கார்டன்!


2006 சட்டசபைத் தேர்தல் நெருங்குவதற்கு சில காலம் வரையில் காங்கிரஸில் செல்வாக்கான தலைவராக இருந்தார் திண்டிவனம் ராமமூர்த்தி. அப்போது காங்கிரஸுக்குள்ளேயே இருந்து கொண்டு ஜெயா புகழாராம் பாடிக் கொண்டிருந்தார். வன்னியர்களுக்கு காங்கிரஸில் மரியாதை இல்லை என்று புது குண்டு போட்டு சத்தியமூர்த்தி பவனில் இருந்து விலகினார் ராமமூர்த்தி. பிறகு போயஸ் கார்டனில் ஐக்கியமானார். அங்கே அவருக்கு ஆரம்பத்தில் நல்ல மரியாதை கிடைத்தது. ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் அந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் திண்டிவனத்தாரின் செல்வாக்கு சரிய ஆரம்பித்தது.



காங்கிரஸில் இருந்து விலகி தமிழகஇந்திரா காங்கிரஸ் என்ற புதுக்கட்சி கண்டு அ.தி.மு.க. கூட்டணியிலும் இணைந்தார். ஆனால் அவர் கட்சிக்கு ஜெயலலிதா ஒரு ஸீட் கூட தரவில்லை. வெறுத்துப் போய் அங்கிருந்து வெளியேறினார். கட்சியின் பெயரையும் தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் என்று மாற்றினார். ஜெயலலிதா மீது இருந்த வெறுப்பை காட்ட  36 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டார் ராமமூர்த்தி. அதோடு ஜெயலலிதா போட்டியிட்ட ஆண்டிப்பட்டி தொகுதிக்கும் வேட்பாளரை போட்டார்.

தேர்தலில் அவருடைய வேட்பாளர் மட்டுமல்ல கட்சியே காணாமல் போனாது. அதன்பிறகு கொஞ்ச காலத்திற்கு கட்சியை நடத்திவிட்டு பிறகு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இனணந்தார். இப்போது அந்த கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருக்கிறார். இப்போது தேர்தல் வருகிறது. தேசியவாத காங்கிரஸ் போட்டியிடுமா? திண்டிவனத்தார் இப்போதும் திணறுவாரா? பார்ப்போம்.

Comments

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா...

காஞ்சிபுரம் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை

1. சோழிங்கநல்லூர் தொகுதி தாம்பரம் தாலுக்கா: நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்டலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், அரசன்கழனி, செம்மஞ்சேரி மற்றும் உத்தண்டி கிராமங்கள். புழதிவாக்கம் (உள்ளகரம்) (பேரூராட்சி), பெருங்குடி (பேரூராட்சி), கொட்டிவாக்கம் (சென்சஸ் டவுன்), ஈஞ்சம்பாக்கம் (சென்சஸ் டவுன்), பாலவாக்கம் (சென்சஸ் டவுன்), நீலாங்கரை (செசன்ஸ் டவுன்), ஒக்கியம்துரைப்பாக்கம் (சென்சஸ் டவுன்), பள்ளிக்கரணை (பேரூராட்சி), மடிப்பாக்கம் (செசன்ஸ் டவுன்), ஜல்லடியன்பேட்டை (செசன்ஸ் டவுன்) மற்றும் சோழிங்கநல்லூர் (பேரூராட்சி)