Skip to main content

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: கருணாநிதி

''ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சகிகலாவின் உற்றார், உறவினர் , நெருங்கிய சொந்தக்காரர்கள் நடத்தும் மிடாஸ் மதுபான ஆலையில் என்ன நடக்கிறது?. குறைந்த விலைக்கு மட்டமான சரக்குகளை வைத்து, உயர்ந்த சரக்கின் லேபிள் ஒட்டிஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடிக்கின்றனர். மது விற்பனையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இன்று மன்னார்குடி கும்பலுக்கு போய்க் கொண்டிருக்கிறது. அந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை தடுத்தாலே இலவச கலர் டிவி பெட்டிகளை வாங்குவதற்கு நிச்சயமாக பணம் கிடைக்கும்.


தமிழ்நாட்டில் உள்ள மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 156 லட்சம். இதில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 53 லட்சம். 2 ஆண்டு காலத்தில் தொலைகாட்சி பெட்டிகள் அனைத்தையும் கொடுத்து விடலாம். 53 லட்சம் தொலைகாட்சி பெட்டிகள் ரூ. 2,000 செலவில் வழங்க ரூ. 1,600 கோடிதான் ஆகும்.''  -  ‍கடந்த தேர்தலில் ஏப்ரல் 6, 2006 அன்று சென்னை புரசைவாக்கம் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கருணாநிதி முழங்கியது.

ஜெயலலிதாவின் உறவினர்கள் நடத்தும் மிடாஸ் மது ஆலையை பற்றி சொன்ன கருணாநிதி ஆட்சியில்தான் அவருக்கு வேண்டப்பட்ட கலைஞர் டி.வி. சரத்குமார் என்று பலருக்கு மது தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். இந்த கொடுமையை எங்கே போய் சொல்ல.

Comments

என்னத்த சொல்றதப்பு.
1.75 லட்சம் கோடி இருந்தால் இந்தியாவில் எல்லோருக்கும் கலர் டி.வி, கேஸ் அடுப்பு, 2 ஏகர் நிலம் வழங்கலாம்.

கலைஞருக்கு யாராவது எடுத்துச் சொல்லக்கூடாதா?

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

சேலம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கங்கவல்லி (தனி) தொகுதி கங்கவல்லி தாலுக்கா, ஆத்தூர் தாலுக்கா (பகுதி) ஊனத்தூர், வேப்பநந்தம், வரகூர், சிறுவாச்சூர், மணிவழுதான், காட்டுக்கோட்டை, சதாசிவபுரம், சார்வாய், தேவியாக்குறிச்சி, தலைவாசல், பட்டுத்துறை, நாவக்குறிச்சி, புத்தூர், நத்தக்கரை, பெரியேரி, ஆறகளுர், தியாகனூர், ஆராத்தி அக்ரஹாரம், மும்முடி, காமக்காபாளையம், வடகுமரை, தென்குமரை, சாத்தப்பாடி, பனவாசல், நாவலூர், சித்தேரி, கோவிந்தம்பாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் கிராமங்கள்.

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி...