Skip to main content

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 31 தொகுதி, 1 ராஜ்யசபா

கோபாலபுரத்தில் இன்று (பிப்ரவரி 18) காலை முதல்வர் கருணாநிதியை சந்தித்தார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இந்த சந்திப்பின் போது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, டி.ஆர். பாலு, துரைமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர். கூட்டணியில் சேர்வது தொடர்பாக பா.ம.க.வுக்கு தி.மு.க.வுக்கு இடையே உரசல்கள் இருந்து வந்த நிலையில் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. கூட்டணியில் பா.ம.க.வை சேர்த்துக் கொள்ள தி.மு.க. முடிவு செய்தது. இது தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறதாம். கடந்த 2006 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் வழங்கப்பட்டன. இப்போது அதே 31 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதோடு ஒரு ராஜ்ய சபா இடமும் அளிக்கப்பட்டுள்ளது என்று ராமதாஸுடன் சென்றவர்கள் குறிப்பிட்டார்கள்

தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தத்துடன் ராமதாஸ் கருணாநிதி

Comments

Anonymous said…
பல்டி அரசியலுக்கு அடுத்த அத்தியாயத்தை எழுதி முடித்திருக்கிறார் ராமதாஸ். கூட்டணியில் பா.ம.க. இருக்கிறது என்று டெல்லியில் கருணாநிதி சொன்னதும் பொத்துக்கொண்டு கோபம் வந்த ராமதாஸ் இப்போது எந்த முகத்துடன் கோபாலபுரம் போய் ஒப்பந்தம் போட்டாராம்
Anonymous said…
அந்தர் பல்டி (மன்னன்) அடித்த மருத்துவர் ராமதாசுக்கு ஒரு ஓ... போடுங்க... குடிக்கிறது கூழ், கொப்பளிக்கிறது பன்னீர் ராமதாசுக்கு எதற்கு இந்த வீண் ஜம்பம்... எல்லாம் அரசியல் விளையாட்டுத்தான். எப்படியும் திமுக கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலில் தோற்க போகிறது. கலைஞரோடு சேர்ந்து ஒப்பாரி வைக்க ஒரு நாள் (ராமதாசு) வேண்டாமா...?

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...