Skip to main content

காங்கிரஸ் நிபந்தனைக்கு தி.மு.க. கட்டுப்பட வேண்டாம்!: வீரமணி


திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தஞ்சையில் இன்று (மார்ச் 5) வெளியிட்ட அறிக்கை:

இன்று காலை தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களது அறிக்கை - நியாய உணர்வும் சுயமரியாதை உணர்வும் உடைய அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருப்பதை போன்றே நமக்கும் அதே எண்ணம் ஓடியது.



தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் இடம் பெற காங்கிர° கட்சி மிகவும் அதிகமான - நடைமுறைக்கு சாத்தியமற்ற - தொகுதிகளை பிடிவாதமாகக் கேட்பதும், கூட்டணி நெறிமுறைகளிலேயே கேள்விப்படாத வகையில், தாங்கள்தான் அத்தொகுதிகளையும்கூட தேர்வு செய்வோம் என்று நிபந்தனை விதிப்பதும் என்ற நிலை காங்கிரஸ் கட்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கட்சியாகவும், தி.மு.க. அவர்கள் தொடுக்கும் நிபந்தனை ஏற்கும் ஒரு கட்சியாகவும் உள்ளது போன்ற ஒரு தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது.

தி.மு.க. தனித்த பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கக் கூடாது என்பதற்காக மறைமுகமாக அதற்கு போதிய அளவு போட்டியிட வாய்ப்பற்ற ஒரு நிலையை உருவாக்கவே இக்கோரிக்கை என்பது சற்று நிதானமாகச் சிந்திக்கும் எவருக்கும் - நடுநிலையாளருக்கும் தெளிவாகவே புரியும். தி.மு.க. இப்படிப்பட்ட நிபந்தனைகளுக்குட்பட்டு தேர்தலை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் தி.மு.க. இருக்கவில்லை.

மக்களுடைய பேராதரவினைப் பெற்று பட்டிதொட்டியெல்லாம் கிளைகளுடன் கட்டுப்பாடு மிக்க தொண்டர்களை, தோழர்களைக் கொண்ட - பல்வேறு சோதனைகளைச் சந்தித்து கரையேறி வெற்றி கொண்ட இயக்கமாகும்.
நிபந்தனைகளுக்குப் பணியத் தேவையில்லை. எனவே, தமிழர்களின் இன உணர்வு, சுயமரியாதை காக்கவே தந்தை பெரியார் கொள்கை லட்சியப்படி அறிஞர் அண்ணா அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, இன்று அந்தக் கொள்கைப் பாரம்பரியத்தை விடாமல் தொடரும் கலைஞர், இனமானப் பேராசிரியர் போன்றவர்களால் நடத்தப்பட்டு வரும் நிலையில் இதுபோன்ற நிபந்தனைகளுக்குப் பணிந்து போகாமல் பெரும்பான்மை வரும் அளவுக்கு தி.மு.க. செயல் வீரர் - வீராங்கனைகளுக்கு அவ்வாய்ப்பினை அளித்து கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காக்கும் இயக்கம் மீண்டும் பெரு பெற்றி கொள்ள வேண்டும்.

சுதந்தரமாக, முடிவு எடுக்க வேண்டுமென சாதனைச் செம்மல் கலைஞர் அவர்களுக்கும், தி.மு.க.வின் உயர்நிலை, அரசியல் செயற்குழுத் தோழர்களுக்கும் தாய்க் கழகம் சார்பில் கனிவான வேண்டுகோளை முன் வைக்கிறது.

Comments

Yoga.s.FR said…
சீச்சீ,இந்தப் பழம் புளிக்கும்!

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...