Skip to main content

காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி உடைகிறது. இன்று முடிவு எடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு

சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி தொடர்ந்து இழுபறியில் இருந்து வருகிறது. காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு குழுவை சேர்ந்த வாசன், ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், தங்கபாலு, ஜெயகுமார் ஆகியோர் தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவை சேர்ந்த ஸ்டாலின், பொன்முடி, ஆற்காட்டார், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோருடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் முடிவு எட்டப்படவில்லை. காங்கிரஸ் ஆரம்பத்தில் 80 தொகுதிகள் வரை கேட்டது. கடைசியில் 65 தொகுதிகளுக்கு இறங்கி வந்தது. தி.மு.க.வோ. 54 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்று கையை விரித்தது. தொகுதி ஒதுக்கீடு தவிர ஆட்சியில் பங்கு, அமைச்சரைவையில் சரி பங்கு இடம், குறைந்தபட்ச செயல்திட்டம் என்று சில கோரிக்கைகளையும் காங்கிரஸ் வைத்தது.

இந்த நிலையில்தான் குலாம் நபி ஆசாத் சென்னை வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். ஆனாலும் முடிவு எட்டப்படவில்லை. கடைசியில் டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தையில் 65 தொகுதிகளுக்கு காங்கிரஸ் சம்மதம் தெரிவித்தது. இந்த நிலையில் இன்று (மார்ச் 4) இரவு 12 மணிக்கு திடிரென்று கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் 63 இடங்களை காங்கிரஸ் கேட்பது கொஞ்சமும் நியாயமில்லை. அப்படி கேட்பது சரிதானா? என்னென்ன தொகுதிகள் என்பதை காங்கிரஸ்தான் முடிவு செய்யும் என்பது சரிதானா? தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் உரிய முடிவு எடுப்போம். என்று சொல்லி இருக்கிறார்.

இதனால் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி உடையும் நிலை உருவாகி இருக்கிறது. மார்ச் 5ம் தேதி மாலை அறிவாலயத்தில் நடக்கும் தி.மு.க. உயர்மட்ட செயல்திட்ட குழு கூட்டத்தில் கூட்டணியை முறித்துக் கொள்வது பற்றி முடிவு எடுக்க தி.மு.க. தீர்மானித்திருக்கிறது. கூட்டணி முறிந்தால் மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலக நேரிடலாம். தி.மு.க. மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்யப் போவதாக செய்திகள் அடிபடுகின்றன. இதனால் தமிழகத்தில் தி.மு.க. அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெறலாம். அப்படி நடந்தால் தி.மு.க. அரசு கவிழ்ந்து கவர்னர் ஆட்சி அமலுக்கு வர வாய்ப்பு இருக்கிறது

Comments

Popular posts from this blog

ஸ்பெக்ட்ரம் பலூன் 'புஸ்" ஆகி விடும்: வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இன்று (டிசம்பர் 22) வெளியிட்ட அறிக்கை: தொலைத்தொடர்புத் துறையின் தற்போதைய அமைச்சர் கபில்சிபல் நேற்றிரவு தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பல்வேறு திடுக்கிடக் கூடிய தகவல்களை ஆணித்தரமான முறையில் விளக்கியுள்ளார்.1999ம் ஆண்டில் - பாரதீய ஜனதா ஆட்சியில், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் - கடைப்பிடிக்கப்பட்டதொலைத்தொடர்பு கொள்கையினால், மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகை ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடியாகும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு சம்பந்தமாக இந்த இழப்பு - இது இப்போது சொல்லப்படுவது போன்ற கற்பனையின் அடிப்படையில் சொல்லப்படும் தொகை அல்ல; நடைமுறைக் கணக்குப்படி ஏற்பட்ட இழப்புத் தொகையாகும்.

பதவியைவிட கொள்கைகளே முக்கியம்: கி.வீரமணி

கலைஞர் எடுத்த - வரலாற்றில் இடம் பெறும் முக்கிய அரசியல் முடிவை உள்ளூர் தமிழர்கள் முதல் உலகத் தமிழர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். பதவிகளை விட கொள்கையே முக்கியம் என்ற ரீதியில் தி.மு.க.வின் திட்டம் அமைய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.