Skip to main content

வேட்புமனு தாக்கல் விதிமுறைகள்!

சட்டசபை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போது கீழ்கண்ட விதிகளை கண்டிபாக கடைபிடிக்க வேண்டும்.

* வேட்பு மனு தாக்கல் செய்யும்போது விண்ணப்பம், டெபாசிட் கட்டணம் போன்றவற்றுடன் தங்களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்.

* பிரமாண பத்திரத்தில் விண்ணப்பதாரர், அவரது மனைவி அல்லது கணவன் மற்றும் குழந்தைகளின் பான்
கார்டு (வருமான வரி கணக்கு எண்), வருமான வரி ரிட்டன் தாக்கல், ஆண்டு வருமானம் தர வேண்டும்.

* நீதிமன்றங்களில் உள்ள வழக்கு விவரம்

* கையிருப்பில் உள்ள ரொக்க பணம், வங்கியில் இருக்கும் டெபாசிட், பத்திரங்கள் மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடு, தபால் அலுவலங்களில் முதலீடு, ஆயுள் காப்பீடு, வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் உள்ள கடன்.

* சொந்தமாக வைத்துள்ள வாகனங்கள், கப்பல்கள், விமானங்கள் விவரம், ஆபரணங்கள், தங்க நகைகள் விவரம்.

* சொத்து விவரம், விவசாய நிலம், விவசாயம் சாராத நிலம், வணிக வளாகங்கள், வீடுகள் மற்றும் அவற்றின் இன்றைய மார்க்கெட் மொத்த மதிப்பு.

* வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் உள்ள கடன்கள், அரசு துறைகளுக்கு செலுத்த வேண்டிய வரிபாக்கி விவரம்.

* தொழில் மற்றும் கல்வித்தகுதி.

Comments

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...