Skip to main content

பா.ம.க., முஸ்லிம் லீக் கட்சிகள் தொகுதிகளை விட்டு கொடுத்திருக்கிறது: கருணாநிதி

காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளை தர முடியாது என்று மத்திய அரசில் இருந்து விலகுவதாக சொன்னது தி.மு.க. இந்த நிலையில் டெல்லியில் ஏற்பட்ட சமாதானத்திற்கு பிறகு 63 தொகுதிகளை தர சம்மதித்திருக்கிறது தி.மு.க. அறிவாலயத்தில் இன்று (மார்ச் 8) தே.மு.தி.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்த தொண்டர்கள் நிகழ்ச்சியில் கருணாநிதி கலத்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

இன்று ஒரு மகிழ்ச்சியான நாள் எங்களுக்கு. காலையில் இருந்தே தொகுதி உட‌ன்பாடு குறித்து ந‌ட‌த்திய‌ நீண்ட‌ பேச்சுவார்த்தைக்க்கு பிற‌கு நிறைவுக்க‌ட்ட‌த்தை அடைந்திருக்கிறோம். காங்கிர‌ஸ் க‌ட்சிக்கு தி.மு.க‌.வுக்கு இடையே தேர்தல் உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது.

தி.மு.க. - 121, காங்கிர‌ஸ் - 63, பா.ம.க. - 30, விடுத‌லைச் சிறுத்தைக‌ள் - 10, கொங்குநாடு முன்னேற்ற கழகம் - 7, முஸ்லிம் லீக் - 2, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் - 1 என 234 தொகுதிக‌ள் ப‌கிந்த‌ளிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து.

இடையில் ஏதோ இழுப‌றி த‌ய‌க்க‌ம் என்றெல்லாம் நிலை இருப்ப‌தாக‌ ப‌த்திரிகையாள‌ர்க‌ள் சில‌ பேர் மிக‌ மிக‌ கேவ‌லமாக‌ ஆத்திர‌த்தோடு பொறாமையோடு அசூயை ம‌ன‌ப்பான்மையோடு இந்த‌ அணி உருவாக‌க் கூடாது. உற‌வு ஏற்ப‌ட்டு விட‌க்கூடாது என்றா எண்ண‌த்தால் த‌வ‌றான‌ செய்திக‌ளை திசை திருப்புகின்ற‌ செய்திக‌ளை தி.மு.க‌. தொண்ட‌ர்க‌ளே க‌ளைப்ப‌டைய‌க் கூடிய‌ அள‌வுக்கு செய்திக‌ளை வெளியிட்டார்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு எல்லாம் ந‌ல்ல‌ ப‌திலாக‌ இன்றைய‌ நாள் அமைந்திருக்கிற‌து.

தி.மு.க‌. 121 இட‌ங்களை மட்டும் வைத்துக் கொண்டு காங்கிர‌ஸ் க‌ட்சி போட்டியிடும் வ‌கையில் ஒரு இட‌த்தை வ‌ழ‌ங்க‌ வேண்டும் என்று ராம‌தாஸிட‌ம் கேட்டுக் கொண்ட‌த‌ற்கு இண‌ங்க பா.ம.க. 31 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஒரு இட‌த்தை அவ‌ர் விட்டுக் கொடுத்திருக்கிறார். அதேப் போல‌ முஸ்லிம் லீக் க‌ட்சியும் ஒரு இட‌த்தை விட்டு த‌ந்திருக்கிற‌து. இவைக‌ளை எல்லாம் கூட்டினால் காங்கிர‌ஸ் க‌ட்சிக்கு 63 இட‌ங்க‌ள் வ‌ருகின்ற‌ன‌. அவ‌ர்க‌ள் இதை ந‌ல்ல‌ எண்ண‌த்தோடு ப‌க்தி ம‌ன‌ப்பாண்மையோடு வ‌ர‌வேற்பார்க‌ள். ஏன் என்றால் புராணத்தில் 63 நாய‌ன்மார் என்பார்க‌ளே அந்த‌ 63 நாய‌ன்மார்க‌ளளை இன்றைக்கு காங்கிர‌ஸ் பெற்றிருக்கிறார்க‌ள்.

Comments

rajamelaiyur said…
Entha allai theruthavay mudiyathu. . .

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ஸ்பெக்ட்ரம் பலூன் 'புஸ்" ஆகி விடும்: வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இன்று (டிசம்பர் 22) வெளியிட்ட அறிக்கை: தொலைத்தொடர்புத் துறையின் தற்போதைய அமைச்சர் கபில்சிபல் நேற்றிரவு தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பல்வேறு திடுக்கிடக் கூடிய தகவல்களை ஆணித்தரமான முறையில் விளக்கியுள்ளார்.1999ம் ஆண்டில் - பாரதீய ஜனதா ஆட்சியில், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் - கடைப்பிடிக்கப்பட்டதொலைத்தொடர்பு கொள்கையினால், மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகை ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடியாகும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு சம்பந்தமாக இந்த இழப்பு - இது இப்போது சொல்லப்படுவது போன்ற கற்பனையின் அடிப்படையில் சொல்லப்படும் தொகை அல்ல; நடைமுறைக் கணக்குப்படி ஏற்பட்ட இழப்புத் தொகையாகும்.

பதவியைவிட கொள்கைகளே முக்கியம்: கி.வீரமணி

கலைஞர் எடுத்த - வரலாற்றில் இடம் பெறும் முக்கிய அரசியல் முடிவை உள்ளூர் தமிழர்கள் முதல் உலகத் தமிழர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். பதவிகளை விட கொள்கையே முக்கியம் என்ற ரீதியில் தி.மு.க.வின் திட்டம் அமைய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.