Skip to main content

விடுதலைச் சிறுத்தைகளுக்கு 10 இடங்கள்: தி.மு.க. அறிவிப்பு

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இன்று (பிப்ரவரி 28) அறிவாலயத்திற்கு வந்த திருமவளவன் கருணாநிதியோடு தொகுதி ஒப்பந்தம் போட்டார். தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் திருமாவளனும் கருணாநிதியும் கையெழுத்திட்டார்கள். அப்போது தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவை சேர்ந்த ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி ஆகியோர் உடன் இருந்தனர்.


விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 13 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை வைத்தார். ஆனால் பத்து தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்று தி.மு.க. கையை விரித்துவிட்டது.கடைசியில் 11 தொகுதிகள் வரை கேட்டு போராடி பார்த்தார் திருமாவளவன். ஆனால் 10 தொகுதிகள் மட்டுமே இப்போது தி.மு.க. ஒதுக்கியிருக்கிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி இடம் பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட்டது. அதில் இரண்டு தொகுதிகள் விடுதலைச் சிறுத்தைகள் வெற்றி பெற்றது. கடந்த 2009 எம்.பி. தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு திருமா மட்டும் வெற்றி பெற்றார். 1998ம் ஆண்டில் இருந்து தேர்தல் அரசியலில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கெடுத்து வந்தாலும் அந்த கட்சிக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் கிடைக்கவில்லை. தனிச் சின்னமும் பெறமுடியவில்லை. இந்த முறை அதனை பெற்றுவிட வேண்டும் என்றுதான் அதிக தொகுதிகளை தி.மு.க.விடம் கேட்டது. ஆனால் கிடைக்கவில்லை.

Comments

Popular posts from this blog

ஸ்பெக்ட்ரம் பலூன் 'புஸ்" ஆகி விடும்: வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இன்று (டிசம்பர் 22) வெளியிட்ட அறிக்கை: தொலைத்தொடர்புத் துறையின் தற்போதைய அமைச்சர் கபில்சிபல் நேற்றிரவு தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பல்வேறு திடுக்கிடக் கூடிய தகவல்களை ஆணித்தரமான முறையில் விளக்கியுள்ளார்.1999ம் ஆண்டில் - பாரதீய ஜனதா ஆட்சியில், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் - கடைப்பிடிக்கப்பட்டதொலைத்தொடர்பு கொள்கையினால், மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகை ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடியாகும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு சம்பந்தமாக இந்த இழப்பு - இது இப்போது சொல்லப்படுவது போன்ற கற்பனையின் அடிப்படையில் சொல்லப்படும் தொகை அல்ல; நடைமுறைக் கணக்குப்படி ஏற்பட்ட இழப்புத் தொகையாகும்.

பதவியைவிட கொள்கைகளே முக்கியம்: கி.வீரமணி

கலைஞர் எடுத்த - வரலாற்றில் இடம் பெறும் முக்கிய அரசியல் முடிவை உள்ளூர் தமிழர்கள் முதல் உலகத் தமிழர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். பதவிகளை விட கொள்கையே முக்கியம் என்ற ரீதியில் தி.மு.க.வின் திட்டம் அமைய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.