Skip to main content

க‌ட்டாய‌ ம‌த‌ மாற்ற‌ த‌டை ச‌ட்ட‌த்தை ர‌த்து செய்துதான் நான்தான்: ஜெய‌ல‌லிதா

ஜெய‌ல‌லிதா இன்று (டிச‌ம்ப‌ர் 29) வெளியிட்ட அறிக்கை:

கருணாநிதி 2006ல் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகுதான் "தமிழ் நாடு கட்டாய மதமாற்ற தடைச் சட்டம்" நீக்கம் செய்யப்பட்டது என்ற ஒரு தவறான செய்தி பிரபல நாளிதழ்கள் சிலவற்றில் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தவறான செய்தி குறித்து சிறுபான்மை இன மக்கள் தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் கீழ்க்கண்ட நிகழ்வுகளை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு உள்ளேன்.


பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் கொள்கை வழியில் நின்று, திராவிட பாரம்பரியத்தைத் தொடர்ந்து பேணிப் பாதுகாத்து வரும் அ.தி.மு.க., சிறுபான்மை இனத்தவர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் காவலனாக என்றைக்கும் திகழும் என்பதை நான் பல முறை உறுதிபடத் தெரிவித்து இருக்கிறேன்.கிறிஸ்தவர்களானாலும், இஸ்லாமியர்களானாலும் அல்லது வேறு எந்த சிறுபான்மை சமுதாயத்தினரானாலும், அவர்களது உரிமைகளையும், நலன்களையும் காப்பதில் அ.தி.மு.க. ஒரு வலிமை மிக்க பாதுகாவலனாக எப்போதும் இருந்து வருகிறது.

எனது தலைமையிலான அரசு, 1991 முதல் 1996 வரையிலான காலக்கட்டத்திலும் சரி, 2001 முதல் 2006 வரையிலான காலக்கட்டத்திலும் சரி, அனைத்து சிறுபான்மை சமுதாயத்தினரின் உரிமைகளையும் பாதுகாத்து, அவர்களது நலன்களை பேணி மேம்படுத்தி சாதனைகள் புரிந்து வந்ததை அனைவரும் நன்கு அறிவர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத சில தீய சக்திகள், சிறுபான்மை இன மக்களை திசை திருப்பும் தீய நோக்கத்துடன், கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தைப் பற்றி மக்கள் மத்தியில், குறிப்பாக சிறுபான்மை இன மக்களிடையே தவறான பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.

"தமிழ்நாடு கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம்" 18.5.2004 அன்று எனது தலைமையிலான அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தின் வாயிலாக அறவே ரத்து செய்யப்பட்டது என்பதை அனைவரும் அறிவர். இது குறித்து நானும் பல முறை மக்களுக்கு தெளிவுபடுத்தி இருக்கிறேன். நடைமுறையில் உள்ள ஒரு சட்டம், ஓர் அவசரச் சட்டத்தின் வாயிலாக ரத்து செய்யப்பட்ட பிறகு, அந்த அவசரச் சட்டத்திற்கு சட்டமன்றத்தின் அனுமதி பெறப்படாவிட்டாலும் கூட, அவசரச் சட்டத்தின் மூலம் ரத்தான சட்டம் தொடர்ந்து ரத்தானதாகவே இருக்கும்; மீண்டும் உயிர் பெறாது. இதுதான் சட்ட நிலைப்பாடு. சட்டமன்றத்திற்கு கொண்டு வந்தால்தான் ரத்தாகும் என்றில்லை. இது 1985ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பிலும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து ஏற்கெனவே நான் முதலமைச்சராக இருந்த போது, 21.5.2005 அன்று தெளிவுபட எனது அறிக்கையின் வாயிலாகவும், 2006 சட்டமன்றப் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போதும், அதற்குப் பின்பும் பல சூழ்நிலைகளில் தெரிவித்து இருக்கிறேன். எனவே, அ.தி.மு.க.வும் நானும், என்றைக்கும் சிறுபான்மை இன மக்களுக்கு உறுதுணையாக, பாதுகாவலனாக இருப்போம் என்பதையும், தமிழ் நாடு கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் எனது தலைமையிலான அரசால் 18.5.2004 அன்று பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்தின் வாயிலாக அறவே ரத்து செய்யப்பட்டுவிட்டது என்பதையும், மீண்டும் சிறுபான்மை இன மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

2006ல் கருணாநிதி ஆட்சி அமைத்த பிறகு இந்த அவசரச் சட்டத்தை மீண்டும் சட்டமன்றத்திற்குக் கொண்டு வந்து அதனை அவரது அரசுதான் ரத்து செய்தது என்று கூறுவது, ஏற்கனவே ஒருவரால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட ஒரு பிரேதத்தை தோண்டி வெளியே எடுத்து, மீண்டும் அதில் வேலை பாய்ச்சி "நான்தான் கொன்றேன்" என்று கூறுவதற்கு சமமாகும் என்பதை 2006லேயே தெளிவுபடுத்தி இருந்தேன். அதையே மீண்டும் கூறுகிறேன். ஆகவே, இந்த சட்டத்தை முழுமையாக ரத்து செய்தது எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசுதான் என்பதை தெளிவுபட தெரிவித்துக் கொள்கிறேன்.

Comments

கவனிப்புத்தன்மை அபாரம் அதை எழுத்தில் கச்சிதமாக கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள்..

Wish You Happy New Year
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.

http://sakthistudycentre.blogspot.com

என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...