Skip to main content

தீர்ப்பை மாற்றிய நாட்டாமை!‘‘

‘‘சாகும் வரை தி.மு.க.வில்தான் இருப்பேன். என் உடலில் தி.மு.க. கொடிதான் போர்த்தப்படும்.’’  2006 தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு நடந்த தி.மு.க. மண்டல மாநாட்டில் இப்படி முழுங்கினார் திரைப்பட நடிகர் சரத்குமார். அடுத்து சில நாட்களில் தி.மு.க.வில் இருந்து விலகினார். அதே சூட்டோடு அ.தி.மு.க.வில் தஞ்சமடைந்தார். 2006 சட்டசபைத் தேர்தலில் நடந்த மிகப் பெரிய கூத்து இது.

‘நாட்டாமை’ படம் வெளிவந்த சமயத்தில் சரத்குமார் அ.தி.மு.க.வின் விசுவாசியாகதான் இருந்தார். அந்த படத்தின் வெற்றி விழாவில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டார். இரட்டை இலை சின்னம் பொறித்த கோர்ட் சூட்டோடு அந்த விழாவில் கலந்து கொண்டு அ.தி.மு.க. பாசத்தை வெளிக்காட்டினார். அதன் பிறகு, ஏற்பட்ட பிணக்கு காரணமாக அ.தி.மு.க.விலிருந்து தனது விசுவாசத்தைத் தி.மு.க.வுக்கு மாற்றிக் கொண்டார் நாட்டாமை. தி.மு.க.வில் சேராவிட்டாலும் 1996 தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.வுக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற பிறகு அந்த கட்சியில் இணைந்தார். தி.மு.க. எம்.பி.யாகவும் ஆக்கப்பட்டார். மத்திய அமைச்சரவையில் தன்னை சேர்க்கவில்லை என்கிற வருத்தத்தில் இருந்தார். தி.மு.க.வில் இருந்து பிரிந்து வந்த ‘சுப்ரீம் ஸ்டார்’ தி.மு.க.வுக்கு எதிராக அதிரடி ஆக்ஷன் காட்டினார். அதுவரையில் கலைஞரை ‘அப்பா’ என்று அழைத்த சரத்குமார் அவரை கழற்றிவிட்டு அ.தி.மு.க.வில் ஐக்கியமாகி ஜெயலலிதாவை ‘அம்மா’ என்று அழைத்தார். தேனி மாவட்டத்தில் பிரசாரத்தில் இருந்த ஜெயலலிதாவை ராதிகாவோடு சந்தித்து அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.


தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவியது. அ.தி.மு.க.வில் சில மாதங்கள் மட்டும் வாசம் செய்துவிட்டு அங்கிருந்து மீண்டும் பிரிந்தார் சரத்குமார். கொஞ்ச காலம் வரையில் அரசியல் பக்கம் தலை வைத்து படுக்கவில்லை. விஜயகாந்த் கட்சி தொடங்கிய நிலையில் தனது பங்குக்கு ‘அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி’ என்கிற பெயரில் புதுக் கட்சிக் கண்டு அதை நடத்திக் கொண்டிருந்த சமயத்தில்தான் 2009 நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. பி.ஜே.பி. கூட்டணியில் அந்த கட்சி சேர்ந்து தோற்றுப் போனது. 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்காக யாரோடு கூட்டு போடலாம் என்று கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார் சரத்குமார்.

தி.மு.க.வில் இருந்து சரத்குமார் பிரிந்து வந்த சமயத்தில் மத்திய அமைச்சரவையில் 7 தி.மு.க. அமைச்சர்கள் இருந்தார்கள் ஆனாலும் அதில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட அமைச்சர் பதவி தரப்படவில்லை என்கிற விமர்சனம் அப்போது எழுந்தது. குறிப்பாக சரத்குமாருக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். சரத்குமாரும் அமைச்சர் பதவி மீது ஒரு கண் வைத்திருந்தார். 2006 சட்டசபைத் தேர்தலில் சரத்குமார் ரசிகர்களுக்கு ஒரு இடம்கூட ஒதுக்கப்படவில்லை என்று சொல்லி குரல் கொடுத்தனர் அவருடைய ஆதரவாளர்கள். தீர்மானம் எல்லாம் போட்டும் அதை தி.மு.க. தலைமை கண்டுகொள்ளவில்லை. இதெல்லாம்தான் தி.மு.க.வை விட்டு சரத்குமார் வெளியேற காரணங்களாக சொல்லப்பட்டன. தி.மு.க.வை தயாநிதி மாறன் முன்னேற்ற கழகம் என்றெல்லாம் சொல்லி 2006 தேர்தலில் பிரச்சாரம் செய்த சரத்குமார் அதன்பிறகு புதுக்கட்சி கண்டவுடன் கருணாநிதியோடு ஓட்டிக் கொண்டிருந்தார்.

என்ன செய்வது. எல்லாம் அரசியல்தான்!

Comments

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...

திருவண்ணாமலை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. செங்கம் (தனி) தொகுதி செங்கம் தாலுக்கா (பகுதி) குப்பநத்தம், பரமனந்தல், தீத்தாண்டப்பட்டு, வளயெம்பட்டு, புதுப்பட்டு, ஆலப்புத்தூர், குயிலம், அன்வராபாத், செ.நாச்சிப்பட்டு, காயம்பட்டு, சென்னசமுத்திரம், பக்கிரிப்பாளையம், அரசன்கன்னி, மேல்செங்கம், மேல்செங்கம் (ஆர்.எப்), அந்தனூர், மேல்புலதியூர், பெரும்பட்டம், மண்மலை, கரியமங்கலம், பிஞ்சூர், வேடங்குப்பம், மேல்பள்ளிப்பட்டு, மேல்வணக்கம்பாடி, ஆனந்தவாடி (ஆர்.எப்), ஆனந்தவாடி, கட்டமடுவு, நரடாப்பட்டு, மேல்ராவந்தவாடி, கரியமலைப்பாடி, ஆண்டிப்பட்டி, தம்புநாய்க்கன்பட்டி, மண்ணாண்டிப்பட்டி, பொரசப்பட்டு, தாழையூத்து, அரட்டவாடி, அரியாகுஞ்சூர், சொரப்பனந்தல், மேல்பொஎன்னாத்தூர், உச்சிமலைக்குப்பம், விண்ணவனுர், பாய்ச்சல், நல்லூர், கண்ணக்குருக்கை, சின்னகோளப்பாடி, பாலியப்பட்டு, அஸ்வனகாசுருணை, பெரியகோளப்பாடி, பீமானந்தல், மேல்கரிப்பூர், கோழுந்தம்பட்டு, சாத்தனூர், சாத்தனூர் அணை, நீப்பத்துறை, வெள்ளாலம்பட்டி, இளங்குன்னி, குருமப்பட்டி, கல்லடாவி, மணிக்கல், புளியம்பட்டி, கருங்காலிப்பாடிபட்டி, வேப்பூர்செக்கடி, வீரணம், தரடாப்பட்டு, கணக்கந்தல், நெடுங்கவாடி, செ.அகரம், பெரும்பாக...