Skip to main content

Posts

எல்.டி.டி.ஈ-யை காட்டி மிரட்டிய தமிழக போலீஸ் அதிகாரி! ஆவணமற்றா அதிசயம்!

2014 மே 21 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் வெளியான கட்டுரை இது ! ''என் இரவு தூக்கத்தைத் தமிழக அரசியல்வாதிகள் தொலைத்துவிட்டார்கள்'' - கடந்த சட்டசபைத் தேர்தலின்போது தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த எஸ்.ஒய்.குரைஷி ஆதங்கத்தோடு கொட்டிய வார்த்தைகள் இவை. இப்போது பணியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட குரைஷி,‘AN UNDOCUMENTED WONDER’ ஆவணமற்ற அதிசயம்) என்ற தலைப்பில் எழுதியிருக்கும் புத்தகம் சூட்டைக் கிளப்பியிருக்கிறது. திருமங்கலம் ஃபார்முலா, பண விநியோகம் என தேர்தல் தில்லுமுல்லுகளைத் தோலுரித்திருக்கிறார் குரைஷி. ஆனால், எந்த இடத்திலும் தனிப்பட்ட நபர்களின் பெயரையோ கட்சியின் பெயரையோ நேரடியாக குரைஷி குறிப்பிடவில்லை. ''தேர்தலில் அச்சுறுத்தல்கள் என்பது வெளியில் இருந்து மட்டுமல்ல... அதிகாரிகள் மட்டத்திலும் எதிரொலிக்கின்றன. நடுநிலை தவறும் அதிகாரிகளை உடனே மாற்றிவிடுவோம். 2011 சட்டமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் உளவுத் துறை கூடுதல் டி.ஜி.பி-யாக இருந்தவர், எஸ்.பி., டி.ஐ.ஜி-க்களை அழைத்து அரசியல் தொடர்பாக பேசிக்கொண்டிருப்பதாக தேர்தல் கமிஷனுக்குத் தகவல் வந்தது. அவருடைய அர...

ஜெயலலிதா அறிக்கையைத் திருத்தக் காரணமானேன்!

ஒரு பத்திரிகையாளனின் டைரி குறிப்புகள்! அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்.ஜி.ஆரில் பணியாற்றிக் கொண்டிருந்த காலம் அது!                                                   நமது எம்.ஜி.ஆர் அலுவலகம் 2002 மே 23-ம் தேதி. இரவு 7 மணி. அலுவலக ஃபேக்ஸ் இயந்திரத்தில் வந்து விழுந்த ஜெயலலிதாவின் அறிக்கையை என்னிடம் நீட்டி, ''தலைப்பு வைத்து அனுப்புங்கள்'' என்றார் ஆசிரியர் பாவை சந்திரன் சார்.  'சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் கருணாநிதிக்குத் தொடர்பு' என்பதுதான் ஜெயலலிதா அறிக்கையின் சாரம்சம். 'கருணாநிதியின் செயல்பாடுகள் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. அவருக்கும் சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கும் தொடர்புகள் இருக்கலாம் எனக் கருதுகிறேன். வீரப்பனைச் சந்திக்கக் கருணாநிதி ரகசியமாக முயல்வதால் அவருடைய நடமாட்டத்தைக் கண்காணிக்க உளவுப் பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறேன். தற்போது கருணாநிதியும், முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் கோவா சென்றிருக்கிறார்கள். ஆனால், அங்கிர...

ஆணையர்களை நியமிக்க 'விஜயகாந்த்' தடை! பரிதாபத்தில் தகவல் அறியும் உரிமை ஆணையம்

2012 செப்டம்பர் 5 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! த மிழகத்தில் 10 தகவல் ஆணையர்கள் இருக்க வேண்டிய இடத்தில் மூன்று பேர் மட்டுமே இருக்கிறார்கள். ஏன் மற்றவர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை என்று கேட்டால், சொல்லப்படும் காரணம் விஜயகாந்த்!  அரசு அலுவலங்களில் ஒளிவு மறைவு இல்லாத செயல்பாடும் ஊழல் இல்லாத நிர்வாகமும் நடக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்தச் சட்டத்தின்படி தகவல்கள் கேட்டு கிடைக்காமல் போனால் மேல் முறையீடு செய்யலாம். மேல் முறையீடும் மறுக்கப்படும் பட்சத்தில் தகவல் ஆணையத்தில் முறையிடலாம். இதற்காகவே இந்திய அளவில் மத்தியத் தகவல் ஆணையமும் மாநில அளவில் மாநிலத் தகவல் ஆணையங்களும் செயல்பட்டு வருகின்றன. தகவல் தரவில்லை என்றால், அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க தகவல் ஆணையங்களுக்கு அதிகாரம் உண்டு. இந்த ஆணையத்தில் காலியாக உள்ள இடங்களில் ஆணையர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி வழக்குப் போட்டிருக்கிறார் 'நீதியின் குரல்’ அமைப்பின் நிறுவனத் தலைவர் சி.ஆர்.பாஸ்கரன். ''...

ஜெயலலிதா... டாஸ்மாக்... மதுவிலக்கு... படிப்படியாக!

ஜெயலலிதா... டாஸ்மாக்... மதுவிலக்கு... படிப்படியாக! 2015 ஏப்ரல் 20 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ‘‘பூ ரண மதுவிலக்குதான்  . எப்பொழுதும் நான் கொண்டுள்ள கொள்கை. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தவுடன், மதுவிலக்குப் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும்.’’ - சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதாவின் புதிய முழக்கம் இது. மதுவிலக்கு திகில்தான் இப்படி வார்த்தைகளாக வந்துவிழுந்திருக்கின்றன. ‘‘டாஸ்மாக் கடைகளின் நேரம் முதலில் குறைக்கப்படும். பிறகு கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். பின்னர் பார்கள் மூடப்படும். குடிகாரர்களை மீட்பதற்கு மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும்’’ என்றெல்லாம் கலர் மத்தாப்புகளைக் கொளுத்திப் போட்டிருக்கிறார் ஜெயலலிதா. ஐந்தாண்டுகள் சும்மா இருந்த அம்மாவின் தேர்தல் வாக்குறுதி பலிக்குமா? பல் இளிக்குமா? ‘‘கேளுங்கள் வாக்காளப் பெருமக்களே, உண்மையைக் கேளுங்கள். வரலாறு மக்களுக்குத் தெரியாது என்று கருணாநிதி நினைக்கிறாரா? நடந்த பழைய வரலாறுகளை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறார்களா?’’ - இதுவும் தீ...

'சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்தானா?’ அங்கிட்டு சௌதாலா...இங்கிட்டு ஜெயலலிதா!

 2015 ஏப்ரல் 18 தேதியிட்ட ஜுனியர் விகடனில் எழுதிய கட்டுரை இது ! இது  ஓர் அபூர்வமான புகைப்படம்! தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா ஆகிய இருவர் மீதும் இவ்வளவு மீடியா வெளிச்சம் பாய்ந்தது இப்போது அல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு, போயஸ் கார்டனில் கேமரா விழுங்கிய இந்தக் காட்சிக்குத் தனிக் கதை உண்டு. 2007ம் ஆண்டு அகில இந்திய அளவில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் இறங்கினார் ஜெயலலிதா. முலாயம் சிங், சந்திரபாபு நாயுடு, சௌதாலா உட்பட இந்தியாவின் முக்கியத் தலைகளை போயஸ் கார்டனுக்கு அழைத்து விருந்து கொடுத்தார். மூன்றாவது அணிக்கு 'ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி’ என்றெல்லாம் அப்போது பெயர் வைத்தார் ஜெயலலிதா. அரசியல் சூழலில் அந்த அணி காணாமல் போனது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க போயஸ் கார்டன் வந்த சௌதாலாவை ஜெயலலிதா வாசலில் காத்திருந்து வரவேற்றார். அப்போது எடுத்த படம்தான் இது. வெவ்வேறு கட்சிகளை... மாநிலங்களைச் சேர்ந்த ஜெயலலிதாவுக்கும் சௌதாலாவுக்கும் இப்போது ஓர் அரசியல் ஒற்றுமை உண்டு. ஊழல் வழக்கில...

'ரகசிய' போலீஸ் 7,67,00,000 !

2008 ஆகஸ்ட் 3 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது ! 'ரகசிய' போலீஸ் 7,67,00,000! போ லீஸ் என்றாலே 'மாமூல்' என்ற அர்த்தம் பொதுமக்கள் மனதில் ஆழ்ந்து பதிந்துவிட்டது. பகிரங்கமாக லஞ்சம் வாங்கும் டிராஃபிக் போலீஸ் முதல், லஞ்சப் புகாரில் சிக்கிய போலீஸ் உயர் அதிகாரிகள் வரை என எத்தனையோ பேரை பார்த்து மக்கள் அலுத்துப் போய்விட்டார்கள். இந்நிலையில், ''இதையும் தாண்டி லஞ்சத்துக்கு இன்னொரு பக்கம் இருக்கிறது. தகிடுதத்தம் எதுவும் செய்யாமல் அரசாங் கத்திடமிருந்தே லட்சலட்சமாய் போலீஸார் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள்...'' என்றொரு தகவலை நம்மிடம் சொல்லி அதிர்ச்சிக்குள்ளாக்கினார் நம்முடைய போலீஸ் நண்பர் ஒருவர். ''போலீஸ் துறையில் ரகசிய தகவல்களை திரட்டுவதற் காக 'ரகசியப் பணிச் செலவு' என்ற வகையில் அரசு ஆண்டுதோறும் பணம் ஒதுக்கி வருகிறது. உளவுத் தகவல்கள் திரட்டுவது, குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளைப் பற்றி துப்பு கொடுக்கும் இன்ஃபார்மர்களுக்கு பணம் செலவழிப்பது போன்றவற்றுக்குத்தான் இந்தப் பணம். காவல்துறையின் மிக முக்கியமா...

முறிந்த கூட்டணி...: பரபரப்பான சர்வே முடிவுகள்!

2008 ஜூன் 25 தேதியிட்ட ஜூனிய விகடன் இதழில் எழுதிய கட்டுரை ! நா ளரு குத்தலும், மணிக்கொரு முணுமுணுப்புமாக 'கூட்டணி தாம்பத்யம்' நடத்திக்கொண்டிருந்த பா.ம.க-வை ஒருவழியாக தி.மு.க. 'விவாகரத்து' செய்துவிட்டது. இந்த முறிவு, அரசியல் அரங்கில் கொஞ்சங்காலமாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்ததுதான் என்பதால், அதிர்ச்சி அலைகள் பெரிதாக இல்லை. ஆனால், 'அடுத்து என்ன?' என்பது சுவாரஸ்யத்தை ரொம்பவே கூட்டுகிற கேள்வி. இந்த நிலையில், மக்களின் மனநிலை குறித்து அறிய, மின்னல் வேக சர்வே மேற்கொண்டோம். ஜூ.வி. சர்வே டீம் நேரில் சந்தித்தது 961 பேரை. விகடன் டாட்காம் இணையதளம் மூலம் கருத்துப் பதிவு செய்தவர்கள் 1,698. ஆக மொத்தம் 2,659 பேர் கலந்து கொண்டார்கள். நேரிலும், இணையதளத்திலுமாக 'பா.ம.க-வை தி.மு.க கூட்டணியை விட்டு அனுப்பியதே சரி' என்பது பெருவாரியான மனநிலை. அதிலும், 'விகடன் டாட்காம்' இணையதள வாசகர்களுக்கு, பா.ம.க. மீது அப்படியொரு கோபம். பத்துக் கேள்விகளுக்கும் 'டிக்' அடித்ததோடு, படு காரமாக விமர்சனங்களும் வைத்திருக்கிறார்கள்...