Skip to main content

எல்.டி.டி.ஈ-யை காட்டி மிரட்டிய தமிழக போலீஸ் அதிகாரி! ஆவணமற்றா அதிசயம்!

2014 மே 21 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் வெளியான கட்டுரை இது !

''என் இரவு தூக்கத்தைத் தமிழக அரசியல்வாதிகள் தொலைத்துவிட்டார்கள்'' - கடந்த சட்டசபைத் தேர்தலின்போது தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த எஸ்.ஒய்.குரைஷி ஆதங்கத்தோடு கொட்டிய வார்த்தைகள் இவை. இப்போது பணியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட குரைஷி,‘AN UNDOCUMENTED WONDER’ ஆவணமற்ற அதிசயம்) என்ற தலைப்பில் எழுதியிருக்கும் புத்தகம் சூட்டைக் கிளப்பியிருக்கிறது. திருமங்கலம் ஃபார்முலா, பண விநியோகம் என தேர்தல் தில்லுமுல்லுகளைத் தோலுரித்திருக்கிறார் குரைஷி. ஆனால், எந்த இடத்திலும் தனிப்பட்ட நபர்களின் பெயரையோ கட்சியின் பெயரையோ நேரடியாக குரைஷி குறிப்பிடவில்லை.



எல்.டி.டி.ஈ-யை காட்டி மிரட்டிய தமிழக போலீஸ் அதிகாரி!

''தேர்தலில் அச்சுறுத்தல்கள் என்பது வெளியில் இருந்து மட்டுமல்ல... அதிகாரிகள் மட்டத்திலும் எதிரொலிக்கின்றன. நடுநிலை தவறும் அதிகாரிகளை உடனே மாற்றிவிடுவோம். 2011 சட்டமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் உளவுத் துறை கூடுதல் டி.ஜி.பி-யாக இருந்தவர், எஸ்.பி., டி.ஐ.ஜி-க்களை அழைத்து அரசியல் தொடர்பாக பேசிக்கொண்டிருப்பதாக தேர்தல் கமிஷனுக்குத் தகவல் வந்தது. அவருடைய அரசியல் செல்வாக்கால், போலீஸ் அதிகாரிகள் மீது கட்டுப்பாடு இருந்தது; இது ஆளுங்கட்சிக்கு உதவியாக இருக்கிறது என புகார்கள் வந்தன. இதனால், அவரை மாற்ற முடிவெடுத்தோம். சம்மன் அனுப்பி டெல்லிக்கு வரவழைத்து விசாரித்தோம்.

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்குப் பார்வையாளராகப் போகச் சொன்னோம். உடனே அவர், 'தேர்தலைச் சீர்குலைக்கத் தமிழகத்தைத் தாக்க எல்.டி.டி.ஈ திட்டமிட்டிருக்கும் தகவல் உளவுத் துறை மூலம் கிடைத்திருக்கிறது. அதோடு தேசிய தலைவர்கள் மூன்று பேரைத் தாக்கவும் எல்.டி.டி.ஈ திட்டமிட்டிருக்கிறது’ என்று சொன்னார். அது தொடர்பாக முடிவு எடுக்க முடியாத அளவுக்கு நெருக்கடியை உருவாக்க முயன்றார். 'தேர்தலில் பிரச்னைகள் எதுவும் ஏற்பட்டால் உங்களைத்தான் சந்தேகப்படுவோம்’ என்று சொன்னேன். கடைசியில் அவர்  விடுப்பில் மலேசியா சென்றுவிட்டார். அதன் பிறகு மத்திய உள்துறைச் செயலாளர் கோபால் பிள்ளையை அழைத்து விசாரித்தபோது 'எல்.டி.டி.ஈ மிரட்டல் எல்லாம் பொய். விடுதலைப் புலிகள் பற்றி அவருக்கு எதுவும் தெரிய வாய்ப்பு இல்லை’ என்றார். அதன் பிறகு மூன்று பேர் லிஸ்டில் இருந்து ஒருவரை உளவுத் துறை கூடுதல் டி.ஜி.பி-யாகத் தேர்வு செய்தோம்'' என திகில் கிளப்பியிருக்கிறார் குரைஷி!


எல்.டி.டி.ஈ-யை காட்டி மிரட்டிய தமிழக போலீஸ் அதிகாரி!

அடுத்து திருச்சியில் ஆர்.டி.ஓ-வாக இருந்த சங்கீதா பற்றி விவரிக்கிறார். ''பஸ்ஸில் 20 கோடி ரூபாய் பணம் கொண்டுசெல்லப்படுவதாக நள்ளிரவு 1.30 மணிக்கு சங்கீதாவுக்கு தகவல் கிடைக்க... உடனே பொன்நகர் ஏரியாவுக்குப் போகிறார் சங்கீதா. அங்கே பஸ்ஸும் இனோவா காரும் நிற்கின்றன. அருகில் இருந்த சி.ஆர்.பி.எஃப் போலீஸ்காரர்களுக்கு தகவல் கொடுக்கிறார் சங்கீதா. அவர்கள் வந்து சேர்வதற்குள் கார் கிளம்பிவிடுகிறது. பஸ்ஸை சோதனையிட்டபோது 5.01 கோடி ரூபாய் சிக்குகிறது.

சுய உதவிக் குழு, காது குத்துதல், மொட்டையடித்தல், ஆரத்தித் தட்டு, திருமண விழா என விதவிதமான வழிகளில் தேர்தலில் பணம் விநியோக  விவகாரம் நடந்துவருகிறது. இப்படி 40 வழிகளில் பண விநியோகம் செய்யப்படுவதைக் கண்டறிந்தோம்.
  
2009-ல் மதுரை திருமங்கலம் இடைத்தேர்தலில் நடந்த பண விநியோகம் அமெரிக்கா வரை போனது. இதுபற்றிய உளவுத் தகவல் அமெரிக்காவுக்குப் போனதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறது. அரசியல் கட்சிகளிடம் இருந்து வாக்காளர்களுக்கு லஞ்சமாகப் பணம், பொருள் வழங்குவது இந்தத் தேர்தலில் இருந்துதான் ஒரு அம்சமாக மாறியது. இது ஒரு குறிப்பிட்ட மத்திய அமைச்சரின் வெற்றி ஃபார்முலா ஆனது. திருமங்கலத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் வரை அந்த அமைச்சர் வழங்கினார். இந்த ஸ்டைல்தான் பிறகு 'திருமங்கலம் ஃபார்முலா’ எனப் பெயர் பெற்றது. 

2011 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலின்போது திருமங்கலம் ஃபார்முலாவை முறியடிக்க தேர்தல் கமிஷன் புது ஃபார்முலாவைப் போட்டது. பீகாரில் கிடைத்த அனுபவத்தை வைத்து, தமிழகத்தில் பண ஆதிக்கத்தைத் தடுக்க ஆபரேஷனில் இறங்கினோம். பறக்கும் படைகள் மூலம் பண விநியோகத்தைத் தடுத்தோம். பணத்தை கொண்டுசெல்ல முடியவில்லை என்று வர்த்தக நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. தேர்தல் கமிஷனின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தது நீதிமன்றம். ஆனால், தன்னார்வக் குழுக்கள் இந்தத் தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட்டதால், தலைமை நீதிபதி அடங்கிய பெஞ்ச் தடையை விலக்கியது!'' என்று தைரியமாகக் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் இது ஆவணமற்ற அதிசயம்தான்!
எம்.பரக்கத் அலி

கட்டுரை லிங்க்: https://www.vikatan.com/government-and-politics/politics/95110-

Comments

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...

திருவண்ணாமலை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. செங்கம் (தனி) தொகுதி செங்கம் தாலுக்கா (பகுதி) குப்பநத்தம், பரமனந்தல், தீத்தாண்டப்பட்டு, வளயெம்பட்டு, புதுப்பட்டு, ஆலப்புத்தூர், குயிலம், அன்வராபாத், செ.நாச்சிப்பட்டு, காயம்பட்டு, சென்னசமுத்திரம், பக்கிரிப்பாளையம், அரசன்கன்னி, மேல்செங்கம், மேல்செங்கம் (ஆர்.எப்), அந்தனூர், மேல்புலதியூர், பெரும்பட்டம், மண்மலை, கரியமங்கலம், பிஞ்சூர், வேடங்குப்பம், மேல்பள்ளிப்பட்டு, மேல்வணக்கம்பாடி, ஆனந்தவாடி (ஆர்.எப்), ஆனந்தவாடி, கட்டமடுவு, நரடாப்பட்டு, மேல்ராவந்தவாடி, கரியமலைப்பாடி, ஆண்டிப்பட்டி, தம்புநாய்க்கன்பட்டி, மண்ணாண்டிப்பட்டி, பொரசப்பட்டு, தாழையூத்து, அரட்டவாடி, அரியாகுஞ்சூர், சொரப்பனந்தல், மேல்பொஎன்னாத்தூர், உச்சிமலைக்குப்பம், விண்ணவனுர், பாய்ச்சல், நல்லூர், கண்ணக்குருக்கை, சின்னகோளப்பாடி, பாலியப்பட்டு, அஸ்வனகாசுருணை, பெரியகோளப்பாடி, பீமானந்தல், மேல்கரிப்பூர், கோழுந்தம்பட்டு, சாத்தனூர், சாத்தனூர் அணை, நீப்பத்துறை, வெள்ளாலம்பட்டி, இளங்குன்னி, குருமப்பட்டி, கல்லடாவி, மணிக்கல், புளியம்பட்டி, கருங்காலிப்பாடிபட்டி, வேப்பூர்செக்கடி, வீரணம், தரடாப்பட்டு, கணக்கந்தல், நெடுங்கவாடி, செ.அகரம், பெரும்பாக...