விகடன் இணையத் தளத்தில் 2020 மார்ச் 27-ம் தேதி எழுதப்பட்ட கட்டுரை! கொரோனா தடுப்பு நடவடிக்கையால் இழப்பு ஏற்பட்டவர்களுக்கு தரப்படும் ஆயிரம் ரூபாயுடன், நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் தருவதாக சொன்ன இரண்டாயிரம் ரூபாயை எடப்பாடி அரசு சேர்த்து தருமா? கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஏற்படும் பொருளாதார இழப்பைச் சமாளிக்க அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதோடு, ``அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி வழங்கப்படும்'' எனவும் சொல்லியிருக்கிறார். பணத்தைப் பெறுவதற்காக ரேஷன் கடைகளில் மக்கள் கூடுவார்களே? இதை எப்படி வழங்கப் போகிறார்கள்? ரேஷன் கடைகளில் கூட்டத்தைத் தவிர்க்க டோக்கன் முறையில், ஒதுக்கப்பட்ட நாளில் நிவாரணம் விநியோகிக்கப்படும் எனச் சொல்லியிருக்கிறார்கள். ரேஷன் கடை இதுதவிர கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பங்களுக்குச் சிறப்பு...
பத்திரிகைகளில் எழுதிய படைப்புகள்