Skip to main content

Posts

``பொது வாழ்க்கைக்கு வர ஆசைப்பட்டதில்லை!'' - ஜெயலலிதாவிடம் சசிகலா `பொய் சொன்ன' தினம் இன்று!

2020 மார்ச் 28-ம் தேதி விகடன் இணையத் தளத்தில் எழுதப்பட்ட கட்டுரை! `அரசியல் ஆசை இல்லை... கட்சிப் பதவிக்கு வர விரும்பவில்லை... எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்ற எண்ணம் இல்லை... அமைச்சர் பதவி வேண்டாம்’ என்றெல்லாம் ஜெயலலிதாவிடம் சசிகலா பொய் சொன்ன தினம் இன்று. எதற்காக சசிகலா இந்தப் பொய்யைச் சொன்னார்? ``கனவிலும் அக்காவுக்கு நான் துரோகம் நினைத்ததில்லை'' ``என் உறவினர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம்'' ``உறவினர்களுடன் எனக்கு ஒட்டுமில்லை; உறவுமில்லை'' ``பொது வாழ்வில் பங்கு பெறவேண்டும் என்ற ஆசை இல்லை'' - இவையெல்லாம் சசிகலா உதிர்த்த வார்த்தைகள். இந்தப் பொன் முத்துகள் உதிர்ந்த தினம் இன்று! ஜெயலலிதா, சசிகலா ``அக்கா... கோட்டைக்குக் கிளம்பிட்டிங்களா. மதிய சாப்பாட்டுக்கு என்ன வேண்டும்?'' என ஜெயலலிதாவிடம் அனுதினமும் சசிகலா கேட்டுக்கொண்டிருந்த காலம் அது! 1988-ம் ஆண்டிலிருந்து ஜெயலலிதாவின் கட்சியையும் ஆட்சியையும் சசிகலா குடும்பம் பங்கு போட்டுக்கொண்டிருந்தபோது, இடையில் ஒரு சறுக்கல். ஜெயலலிதா ஆட்சியைக் கைப்பற்ற ச...

கொரோனா தடுப்பு... முன்பு சொன்ன 2,000 ரூபாயையும் சேர்த்துக் கொடுங்க எடப்பாடியாரே!

விகடன் இணையத் தளத்தில் 2020 மார்ச் 27-ம் தேதி எழுதப்பட்ட கட்டுரை! கொரோனா தடுப்பு நடவடிக்கையால் இழப்பு ஏற்பட்டவர்களுக்கு தரப்படும் ஆயிரம் ரூபாயுடன், நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் தருவதாக சொன்ன இரண்டாயிரம் ரூபாயை எடப்பாடி அரசு சேர்த்து தருமா? கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஏற்படும் பொருளாதார இழப்பைச் சமாளிக்க அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்  என அறிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதோடு, ``அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி வழங்கப்படும்'' எனவும் சொல்லியிருக்கிறார். பணத்தைப் பெறுவதற்காக ரேஷன் கடைகளில் மக்கள் கூடுவார்களே? இதை எப்படி வழங்கப் போகிறார்கள்? ரேஷன் கடைகளில் கூட்டத்தைத் தவிர்க்க டோக்கன் முறையில், ஒதுக்கப்பட்ட நாளில் நிவாரணம் விநியோகிக்கப்படும் எனச் சொல்லியிருக்கிறார்கள். ரேஷன் கடை இதுதவிர கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பங்களுக்குச் சிறப்பு...

எல்.டி.டி.ஈ-யை காட்டி மிரட்டிய தமிழக போலீஸ் அதிகாரி! ஆவணமற்றா அதிசயம்!

2014 மே 21 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் வெளியான கட்டுரை இது ! ''என் இரவு தூக்கத்தைத் தமிழக அரசியல்வாதிகள் தொலைத்துவிட்டார்கள்'' - கடந்த சட்டசபைத் தேர்தலின்போது தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த எஸ்.ஒய்.குரைஷி ஆதங்கத்தோடு கொட்டிய வார்த்தைகள் இவை. இப்போது பணியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட குரைஷி,‘AN UNDOCUMENTED WONDER’ ஆவணமற்ற அதிசயம்) என்ற தலைப்பில் எழுதியிருக்கும் புத்தகம் சூட்டைக் கிளப்பியிருக்கிறது. திருமங்கலம் ஃபார்முலா, பண விநியோகம் என தேர்தல் தில்லுமுல்லுகளைத் தோலுரித்திருக்கிறார் குரைஷி. ஆனால், எந்த இடத்திலும் தனிப்பட்ட நபர்களின் பெயரையோ கட்சியின் பெயரையோ நேரடியாக குரைஷி குறிப்பிடவில்லை. ''தேர்தலில் அச்சுறுத்தல்கள் என்பது வெளியில் இருந்து மட்டுமல்ல... அதிகாரிகள் மட்டத்திலும் எதிரொலிக்கின்றன. நடுநிலை தவறும் அதிகாரிகளை உடனே மாற்றிவிடுவோம். 2011 சட்டமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் உளவுத் துறை கூடுதல் டி.ஜி.பி-யாக இருந்தவர், எஸ்.பி., டி.ஐ.ஜி-க்களை அழைத்து அரசியல் தொடர்பாக பேசிக்கொண்டிருப்பதாக தேர்தல் கமிஷனுக்குத் தகவல் வந்தது. அவருடைய அர...

ஜெயலலிதா அறிக்கையைத் திருத்தக் காரணமானேன்!

ஒரு பத்திரிகையாளனின் டைரி குறிப்புகள்! அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்.ஜி.ஆரில் பணியாற்றிக் கொண்டிருந்த காலம் அது!                                                   நமது எம்.ஜி.ஆர் அலுவலகம் 2002 மே 23-ம் தேதி. இரவு 7 மணி. அலுவலக ஃபேக்ஸ் இயந்திரத்தில் வந்து விழுந்த ஜெயலலிதாவின் அறிக்கையை என்னிடம் நீட்டி, ''தலைப்பு வைத்து அனுப்புங்கள்'' என்றார் ஆசிரியர் பாவை சந்திரன் சார்.  'சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் கருணாநிதிக்குத் தொடர்பு' என்பதுதான் ஜெயலலிதா அறிக்கையின் சாரம்சம். 'கருணாநிதியின் செயல்பாடுகள் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. அவருக்கும் சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கும் தொடர்புகள் இருக்கலாம் எனக் கருதுகிறேன். வீரப்பனைச் சந்திக்கக் கருணாநிதி ரகசியமாக முயல்வதால் அவருடைய நடமாட்டத்தைக் கண்காணிக்க உளவுப் பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறேன். தற்போது கருணாநிதியும், முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் கோவா சென்றிருக்கிறார்கள். ஆனால், அங்கிர...

ஆணையர்களை நியமிக்க 'விஜயகாந்த்' தடை! பரிதாபத்தில் தகவல் அறியும் உரிமை ஆணையம்

2012 செப்டம்பர் 5 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! த மிழகத்தில் 10 தகவல் ஆணையர்கள் இருக்க வேண்டிய இடத்தில் மூன்று பேர் மட்டுமே இருக்கிறார்கள். ஏன் மற்றவர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை என்று கேட்டால், சொல்லப்படும் காரணம் விஜயகாந்த்!  அரசு அலுவலங்களில் ஒளிவு மறைவு இல்லாத செயல்பாடும் ஊழல் இல்லாத நிர்வாகமும் நடக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்தச் சட்டத்தின்படி தகவல்கள் கேட்டு கிடைக்காமல் போனால் மேல் முறையீடு செய்யலாம். மேல் முறையீடும் மறுக்கப்படும் பட்சத்தில் தகவல் ஆணையத்தில் முறையிடலாம். இதற்காகவே இந்திய அளவில் மத்தியத் தகவல் ஆணையமும் மாநில அளவில் மாநிலத் தகவல் ஆணையங்களும் செயல்பட்டு வருகின்றன. தகவல் தரவில்லை என்றால், அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க தகவல் ஆணையங்களுக்கு அதிகாரம் உண்டு. இந்த ஆணையத்தில் காலியாக உள்ள இடங்களில் ஆணையர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி வழக்குப் போட்டிருக்கிறார் 'நீதியின் குரல்’ அமைப்பின் நிறுவனத் தலைவர் சி.ஆர்.பாஸ்கரன். ''...

ஜெயலலிதா... டாஸ்மாக்... மதுவிலக்கு... படிப்படியாக!

ஜெயலலிதா... டாஸ்மாக்... மதுவிலக்கு... படிப்படியாக! 2015 ஏப்ரல் 20 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ‘‘பூ ரண மதுவிலக்குதான்  . எப்பொழுதும் நான் கொண்டுள்ள கொள்கை. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தவுடன், மதுவிலக்குப் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும்.’’ - சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதாவின் புதிய முழக்கம் இது. மதுவிலக்கு திகில்தான் இப்படி வார்த்தைகளாக வந்துவிழுந்திருக்கின்றன. ‘‘டாஸ்மாக் கடைகளின் நேரம் முதலில் குறைக்கப்படும். பிறகு கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். பின்னர் பார்கள் மூடப்படும். குடிகாரர்களை மீட்பதற்கு மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும்’’ என்றெல்லாம் கலர் மத்தாப்புகளைக் கொளுத்திப் போட்டிருக்கிறார் ஜெயலலிதா. ஐந்தாண்டுகள் சும்மா இருந்த அம்மாவின் தேர்தல் வாக்குறுதி பலிக்குமா? பல் இளிக்குமா? ‘‘கேளுங்கள் வாக்காளப் பெருமக்களே, உண்மையைக் கேளுங்கள். வரலாறு மக்களுக்குத் தெரியாது என்று கருணாநிதி நினைக்கிறாரா? நடந்த பழைய வரலாறுகளை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறார்களா?’’ - இதுவும் தீ...