Skip to main content

Posts

பா.ம.க. போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற பா.ம.க.வுக்கு 30 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. என்னென்ன தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக இரண்டு கட்சிகளின் தொகுதி பங்கீடு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இன்று (மார்ச் 15) இரவு அறிவாலயத்திற்கு ராமதாஸ் வந்து தொகுதிகளை இறுதி செய்தார். ஒப்பந்தத்தில் ராமதாஸும் கருணாநிதியும் கையெழுத்திட்டனர். பா.ம.க்.போட்டியிடும் தொகுதிகள் விவரம்:

2006 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களின் நிலை!

2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 48 இடங்களில் போட்டியிட்டது காங்கிரஸ். 34 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நிலைமை எப்படி போகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.கடந்த தேர்தல் நிலவரம் இங்கே..

பா.ம.க., முஸ்லிம் லீக் கட்சிகள் தொகுதிகளை விட்டு கொடுத்திருக்கிறது: கருணாநிதி

காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளை தர முடியாது என்று மத்திய அரசில் இருந்து விலகுவதாக சொன்னது தி.மு.க. இந்த நிலையில் டெல்லியில் ஏற்பட்ட சமாதானத்திற்கு பிறகு 63 தொகுதிகளை தர சம்மதித்திருக்கிறது தி.மு.க. அறிவாலயத்தில் இன்று (மார்ச் 8) தே.மு.தி.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்த தொண்டர்கள் நிகழ்ச்சியில் கருணாநிதி கலத்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு

2011 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தொடர்பாக இறுதி அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ஒரு இடம் ஒதுக்கப்பட்ட புரட்சி பாரதம் கட்சிக்கு இந்த முறை சீட் இல்லை. அருந்ததியர் மக்கள் கட்சி, விவசாய தொழிலாளர் கட்சி, தமிழ்மாநில தேசிய லீக், உழவர் உழைப்பாளர் கட்சி ஆகிய கட்சிகளுக்கும் இடங்கள் இல்லை. தி.மு.க. - 121 காங்கிர‌ஸ் - 63 பா.ம.க. - 30 விடுத‌லைச் சிறுத்தைக‌ள் - 10 கொங்குநாடு முன்னேற்ற கழகம் - 7 முஸ்லிம் லீக் - 2 மூவேந்தர் முன்னேற்றக் கழகம் - 1 மொத்த தொகுதிகள் - 234

கூட்டணிக்குள் புது கட்சிகள் வரும்: கருணாநிதி பேட்டி

மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகல் என்கிற அறிவிப்பு வந்த பிறகு இன்று (மார்ச் 6) இரவு 7 மணிக்கு அண்ணா அறிவாலயத்திற்கு மத்திய தி.மு.க. அமைச்சர்கள் அழகிரி, தயாநிதி மாறன், நெப்போலியன் ஆகியோர் வந்தார்கள். அதன்பிறகு முதல்வர் கருணாநிதி வந்தார். ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடந்தது. வெளியே வந்த கருணாநிதி நிருபர்களுக்கு அளித்தார் பேட்டி விவரம்:

தொகுதி வாரியாக வாக்காளர்கள்!

மாவட்டவாரியாக தொகுதிகளின் வாக்காளர்கள் விவரம் இங்கே... 1. திருவள்ளூர் மாவட்டம் 1. கும்மிடிபூண்டி ஆண் வாக்காளர்கள்: 1,05,145 பெண் வாக்காளர்கள்: 1,06,492 அரவாணிகள்: 9 மொத்த வாக்காளர்கள்: 2,11,646

வேட்புமனு தாக்கல் விதிமுறைகள்!

சட்டசபை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போது கீழ்கண்ட விதிகளை கண்டிபாக கடைபிடிக்க வேண்டும். * வேட்பு மனு தாக்கல் செய்யும்போது விண்ணப்பம், டெபாசிட் கட்டணம் போன்றவற்றுடன் தங்களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்.