அ.தி.மு.க. கூட்டணியில். விஜயகாந்தின் தே.மு.தி.க. கடந்த பிப்ரவரி 24ம் தேதி சேர்ந்தது. அ.தி.மு.க. அலுவலகத்திற்கு அப்பொது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் சார்பில், தொகுதி பங்கீட்டுக் குழு உறுப்பினர்களான, பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில், அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன், பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன், இளைஞர் அணிச் செயலாளரும் விஜயகாந்தின் மச்சானுமான எல்.கே. சுதீஷ் ஆகியோர் பங்கு பெற்றனர். ஆனால் விஜயகாந்த் வரவில்லை. இந்த நிலையில் இன்று (மார்ச் 4) போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை விஜயகாந்த் சந்தித்தார். மொத்தம் 25 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது.
1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).
Comments