காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளை தர முடியாது என்று மத்திய அரசில் இருந்து விலகுவதாக சொன்னது தி.மு.க. இந்த நிலையில் டெல்லியில் ஏற்பட்ட சமாதானத்திற்கு பிறகு 63 தொகுதிகளை தர சம்மதித்திருக்கிறது தி.மு.க. அறிவாலயத்தில் இன்று (மார்ச் 8) தே.மு.தி.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்த தொண்டர்கள் நிகழ்ச்சியில் கருணாநிதி கலத்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.
இன்று ஒரு மகிழ்ச்சியான நாள் எங்களுக்கு. காலையில் இருந்தே தொகுதி உடன்பாடு குறித்து நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைக்க்கு பிறகு நிறைவுக்கட்டத்தை அடைந்திருக்கிறோம். காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க.வுக்கு இடையே தேர்தல் உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது.
தி.மு.க. - 121, காங்கிரஸ் - 63, பா.ம.க. - 30, விடுதலைச் சிறுத்தைகள் - 10, கொங்குநாடு முன்னேற்ற கழகம் - 7, முஸ்லிம் லீக் - 2, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் - 1 என 234 தொகுதிகள் பகிந்தளிக்கப்பட்டிருக்கிறது.
இடையில் ஏதோ இழுபறி தயக்கம் என்றெல்லாம் நிலை இருப்பதாக பத்திரிகையாளர்கள் சில பேர் மிக மிக கேவலமாக ஆத்திரத்தோடு பொறாமையோடு அசூயை மனப்பான்மையோடு இந்த அணி உருவாகக் கூடாது. உறவு ஏற்பட்டு விடக்கூடாது என்றா எண்ணத்தால் தவறான செய்திகளை திசை திருப்புகின்ற செய்திகளை தி.மு.க. தொண்டர்களே களைப்படையக் கூடிய அளவுக்கு செய்திகளை வெளியிட்டார்கள். அவர்களுக்கு எல்லாம் நல்ல பதிலாக இன்றைய நாள் அமைந்திருக்கிறது.
தி.மு.க. 121 இடங்களை மட்டும் வைத்துக் கொண்டு காங்கிரஸ் கட்சி போட்டியிடும் வகையில் ஒரு இடத்தை வழங்க வேண்டும் என்று ராமதாஸிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பா.ம.க. 31 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஒரு இடத்தை அவர் விட்டுக் கொடுத்திருக்கிறார். அதேப் போல முஸ்லிம் லீக் கட்சியும் ஒரு இடத்தை விட்டு தந்திருக்கிறது. இவைகளை எல்லாம் கூட்டினால் காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்கள் வருகின்றன. அவர்கள் இதை நல்ல எண்ணத்தோடு பக்தி மனப்பாண்மையோடு வரவேற்பார்கள். ஏன் என்றால் புராணத்தில் 63 நாயன்மார் என்பார்களே அந்த 63 நாயன்மார்களளை இன்றைக்கு காங்கிரஸ் பெற்றிருக்கிறார்கள்.

Comments