''இதுவரை 31,000 கிலோமீட்டர் தொலைவுக்கு பயணம் செய்து விட்டேன். எங்கும் மக்கள் மனதில் நிம்மதி இல்லை, யாருமே சந்தோஷமாக இல்லை. கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். கடந்த காலங்களில் ஏற்பட்டு வந்த ஆட்சியாளர்கள் ஏற்படுத்திய கஷ்டங்கள் இவை. எங்குமே நல்ல சாலை இல்லை, குடிநீர் வசதி இல்லை, மின் வசதி இல்லை, இப்படி பல அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் பூர்த்தியாகத கிராமங்கள நூற்றுக்கணக்கில் உள்ளன. அந்த மக்களின் கஷ்டத்தை கடந்த காலங்களில் ஆண்டவர்கள் போக்கவில்லை. நான்அதை சரி செய்யப் போகிறேன். எனக்கு இந்த ஒரு முறை மட்டும் வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள். நான் ஒரே ஒரு தேர்தல் அறிக்கையைத்தான் வெளியிட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. இலவச அரிசியை நான்தான் முதலில் அறிவித்தேன். ஆனால் எனது தேர்தல் அறிக்கை காப்பி அடித்து இப்போது மற்ற கட்சிகள் தினசரி ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன.
என்னை பிரசாரம் செய்ய விடாமல் தடுக்கிறார்கள். மின்சார இணைப்பைத் துண்டிக்கிறார்கள், கொடிகள், பேனர்களை அகற்றுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் யார் என்பதை தேர்தலில் நிரூபிப்பேன்.’’ - கடந்த 2006 தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த். (கடலூர் மஞ்சக்குப்பம்)

Comments