* எந்த ஒரு அரசியல் கட்சியும் அல்லது வேட்பாளரும், சாதி, இனம், மதம், மொழி ஆகியவற்றுக்கு இடையே வெறுப்பையும் துவேசத்தையும் தூண்டும் செயலில் ஈடுபடக்கூடாது.
* பிற கட்சிகளை பற்றி விமர்சிக்கும்போது அதன் முந்தைய செயல்பாடுகள், கொள்கைகள், திட்டங்கள், பணிகள் குறித்து மட்டுமே பேச வேண்டும்.
* பொது நடவடிக்கைக்கு தொடர்பில்லாத, தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசவோ கூடாது.
* சாதி, மத உணர்வுகளின் அடிப்படையில் வாக்கு சேகரிப்பதை தவிர்க்க வேண்டும். மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள், கோவில்கள் அல்லது மற்ற வழிபாட்டு தலங்களில் பிரசாரம் செய்யக்கூடாது.
* தனிப்பட்ட நபருக்கு சொந்தமான இடம், கட்டிடம் சுற்றுச்சுவர் ஆகியவற்றில் அனுமதியின்றி கொடி, பேனர் கட்டுதல், பிரசுரங்கள் ஒட்டுதல், வாசகங்கள் எழுதவோ கூடாது.
* அரசியல் கட்சி வேட்பாளர்கள் தாங்கள் நடத்த உத்தேசித்து உள்ள கூட்டங்களின் நாள், நேரம் ஆகிய விபரங்களை உள்ளூர் காவல்துறைக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
* ஒருபகுதியில் கூட்டம் நடத்த திட்டமிடும் முன்னர் அந்த பகுதியில் தடை உத்தரவு ஏதேனும் உள்ளதா என்பதை தெரிந்து அதன்படி நடக்க வேண்டும். இதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரும் பட்சத்தில் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.
* ஒலிபெருக்கிகளை அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டும்.
* கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்து உள்ளவர்கள் வேறு எவரெனும் அந்த கூட்டத்துக்கு இடர்பாடுகள் செய்தாலோ அல்லது பிரச்சினை ஏற்படுத்தினாலோ அவர்கள் மீது தாங்களாகவே எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. காவல்துறை உதவியை பெற்று அவர்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பொது மைதானங்களில் அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் கூட்டங்கள் நடத்தலாம். ஆனால் அனைத்து கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் இது தொடர்பாக சமமான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
* ஊர்வலம் நடத்த திட்டமிட்ட நாள், நேரம், ஊர்வலப்பாதை ஆகியவற்றை முன்கூட்டியே செய்து முடிக்க வேண்டும். ஏற்கனவே திட்டமிட்டதில் இருந்து மாற்றங்கள் செய்யக்கூடாது. இதுகுறித்து காவல்துறைக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்.
* ஊர்வலம் நடத்தப்படுவதன் மூலம் அந்த ஊர்வலப்பாதையில் பொதுமக்களுக்கு ஏதாவது இடைïறு அல்லது போக்குவரத்துக்கு தடைகள் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* ஊர்வலம் மிக நீளமாக இருக்குமானால் சாலைகள் கூடும் இடங்கள் போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் பெரிய இடைïறுகள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு ஊர்வலத்தை பல தொகுதிகளாக பிரித்து இடைவெளிவிட்டு நடத்த ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
* இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் ஒரேநேரம், நாள், ஒரே இடத்தில் நடத்த உத்தேசித்து இருந்தால் அந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்தவர்கள் முன்னதாகவே ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு மோதல்கள், பிரச்சினைகள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு உள்ளூர் காவல்துறையின் உதவியை கேட்டுப்பெற வேண்டும்.
* ஊர்வலம் செல்லும்போது அதில் கலந்து கொள்பவர்கள் தேவையில்லாத பொருட்களை எடுத்துச் செல்லாமல் அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* தனது கட்சியின் தொண்டர்கள், மற்ற தலைவர்களின் உருவ பொம்மைகளை எடுத்துச்செல்வதையோ அல்லது அதை எரிப்பதையோ தவிர்க்க வேண்டும்.
* இரவு 10 மணிக்கு பிறகு கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தக்கூடாது.
* அந்தப்பகுதியில் உள்ளூர் சட்ட நெறிமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தட்பவெப்பநிலை, விழாக்காலங்கள், தேர்வுகள் முதலிய அம்சங்களை கணக்கில் கொண்டு ஊர்வலங்கள், கூட்டங்கள் நடத்த வேண்டும்.
* காலை 6 மணிக்கு முன்பும் இரவு 10 மணிக்கு பின்பும் ஒலிபெருக்கிகளை கட்டாயம் பயன்படுத்தக்கூடாது.
* ஒரு கட்சியினர் ஒட்டிய சுவரொட்டிகளை மற்ற கட்சியினர் அகற்றக்கூடாது.
* வாக்குச்சாவடிக்கு அருகில் சிறு குறிப்பு சீட்டுகள் வழங்கும் இடத்துக்கு அருகில் சுவரொட்டிகள் ஒட்டவோ, சின்னங்கள் மற்றும் பிற விளம்பரங்கள் செய்யவோ கூடாது.
Comments