காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக இன்று (மார்ச் 5) சென்னை அறிவாலயத்தில் நடந்த தி.மு.க. உயர்மட்ட செயல்திட்ட குழு கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி படித்த அறிக்கை விவரம்:
இந்திய திருநாட்டின் இறையாண்மை, ஒற்றுமையும், ஒருமைப்பாடு, மதசார்பற்ற தன்மை இவற்றை கட்டிக்காக்கும் வகையில் செயல்பட்டு வருகின்ற தி.மு.க., தான் மேற்கொண்டுள்ள இந்த கொள்கையின் அடிப்படையில்தான் எந்த ஒரு கட்சியும் அணி சேர்த்து பாடுபட்டு பணியாற்றி வருகிறது.
இந்த நிலையில் இருந்து இம்மையும் மாறாமல் கடந்த 7 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியுடன், மற்ற தோழமை கட்சிகளுடன் நல்லுறவு கொண்டு நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றில் நற்பணி ஆற்றி வருவதோடு ஜனநாயக ரீதியில் நடைபெறும் தேர்தல்களில் அணி சேர்ந்து போட்டியிடும் கட்சிகளின் ஒன்றாக தி.மு.க. இயங்கி வருகிறது நாடறிந்த உண்மையாகும்.
அந்த வகையில் 2011 தேர்தலில் புதுவிதமான சில பிரச்சனைகள் உருவாக்கப்பட காங்கிரஸ் கட்சி காரணம் ஆகிறது தி.மு.க.வை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தியாகத் திருவிளக்கு சோனியா காந்தியை ஒவ்வொரு தேர்தலின் போது சந்தித்து கருத்துகளை பறிமாறிக் கொள்வதைப் போல இந்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டும், என் உடல்நிலையை பொறுட்படுத்தாமல் டெல்லிக்கே சென்று இரண்டு நாள் தங்கியிருந்து சந்தித்து உரையாடிய போது அவர்கள் விரும்பியவாறு முதலில் தி.மு.க. காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்த தீர்மாணித்தது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காலதாமதம் ஆகிய நிலையில் தி.மு.க., பா.ம.க., மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த துவங்கியது. மற்ற கட்சிகளுடன் கலந்து பேசி அதுவரையில் இறுதி முடிவவாக எத்தனை தொகுதிகள் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றி தீர்மாணிக்காமல் இருந்து அதன் பிறகே சென்னையிலேயே 20.2.11 அன்று காங்கிரஸ் கட்சி குழுவினருடன் பேச்சுவார்த்தை நடந்தது.
காங்கிரஸ் கட்சியின் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் எந்தவிதமான முடிவும் எய்தபெறாத நிலையில் இறுதி முடிவு எடுக்க காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர், மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் சென்னை வந்து பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். அவர் முன்னிலையில் நான் இருந்து நடத்திய பேச்சுவார்த்தையின் போது 57 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்வதென ஒப்புதல் கொடுத்தோம். அதுபற்றி டெல்லி சென்று மேலிடத்தில் கலந்து கொண்டு உடனடியாக அறிவிப்பதாக குலாம் நபி ஆசாத் கூறிவிட்டு சென்றார். பின்னர் டெல்லியில் இருந்து பேசிய ஆசாத் அவர்கள் 60 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு தேவை என்றும், அப்போதுதான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியுமென்றும் அறிவித்ததை தொடர்ந்து தி.மு.க. சார்பில் 60 தொகுதிகள் அளிக்கவும் ஒப்புக் கொண்டு, சென்னைக்கு வந்து கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை நிறைவு செய்யலாம் என்று நான் கேட்டுக் கொண்டேன்.
ஒப்பந்தத்தில் கையெழுத்திட வருவார்கள் என்று எண்ணத்தில் இருந்த நிலையில், அங்கிருந்து தொலைபேசியில் 60 இடங்கள் போதாது. 63 தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் அந்த தொகுதிகளும் அவர்கள்தான் நிர்ணயம் செய்யப்படும் என்றும், எத்தனை இடங்கள் என்று ஒப்பந்தம் செய்யும் போதே எந்தெந்த தொகுதிகள் என்பதும் குறிப்பிட வேண்டும் என்றும் நிபந்தனைகள் கூறப்பட்டது.
சட்டமன்ற தேர்தல் ஆனாலும் நாடாளுமன்றத் தேர்தல் ஆனாலும் இதுவரை நடைபெற்ற எந்தவொரு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையிலும் இப்படியொரு நிலையை நானோ தி.மு.க. தலைமையோ சந்தித்ததில்லை. இதை காணும் போது முதலில் கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட 48ல் தொடங்கி 51 என்றாகி, 53 என்றாகி, 55 என்றாகி, 57 என்றாகி, இறுதியில் 60 தொகுதிகளுக்கு தி.மு.க. ஒப்புதல் அளித்து அதன்பிறகு இது போன்று நிபந்தனைகள். 63 தொகுதிகள் வேண்டும் என்பதும் அந்தத் தொகுதிகளின் பெயர்களை பரஸ்பரம் இரண்டு கட்சிகளும் கலந்து பேசி முடிவு செய்யாமல், அவர்கள் நிச்சயிப்பதையே ஒதுக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது, அதிர்ச்சி தரக் கூடியவைகளாக அமைந்திருப்பதை கண்டுதான் இதை நானோ, பேராசிரியரோ மாத்திரம் முடிவு எடுத்து அறிவிப்பதாக இருத்தல் ஆனாதென கருதி தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழுவில் விவாதித்து முடிவு எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் உடன்பாட்டுக்காக தொடக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட முயற்சிகளையும், உருவாக்கப்பட்ட பிரச்னைகளையும் எண்ணிப்பார்க்கும் போது இரு கட்சிகளின் முன்னணி செயல்வீரர்களும் தொண்டர்களும் மன வேறுபாடின்றி நேச மனப்பான்மையோடு பணியாற்றும் நிலைக்கு, குந்தகம் ஏற்படுத்தி, தேர்தல் முடிவைப் பாதிப்பதற்கு இது போன்ற பிரச்னைகள், செயல்பாடுகள், இழுத்தடிப்புகள் காரணமாகி விடக் கூடும் என்பதற்காக மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் இந்தப் போக்கு தேர்தல் உடன்பாட்டை சுமூகமாக செய்து கொள்ள வேண்டும் என்பதற்கு பதிலாக இதையே சாக்காக வைத்து தி.மு.க.வை அணியில் இருந்தே அகன்று விடச் செய்வதற்கான காரியமோ என்று ஐயுற வேண்டிய நிலைக்குதான் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். எனவே இந்த உயர்நிலை செயல் திட்டக் குழுவில் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய நிலைக்கு நாம் உள்ளாகி இருக்கிறோம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

Comments