* திருமண மண்டபங்களில் முன் பதிவு விவரங்களை சம்பந்தப்பட்ட மண்டப உரிமையாளர்கள் அவ்வப்போது தாலுகா அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையங்களில் தெரிவிக்க வேண்டும். இதற்கான படி வங்கள் மண்டப உரிமை யாளர்களுக்கு வழங்கப்படும்.
* அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி காது குத்து, திருமண விழா என்ற பெயரில் முன்பதிவு செய்து திருமண மண்டபங்களை பயன்படுத்துவது தெரிய வந்தால் மண்டப உரிமையாளர்கள் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையம் மற்றும் தாலுகா அலுவலகத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
* அன்னதான நிகழ்ச்சி, பிரியாணி விருந்து நிகழ்ச்சிகளுக்கும் பரிசு பொருட்களை பட்டுவாடா செய்வதற்கும் திருமண மண்டபங்களை பயன்படுத்த உரிமையாளர்கள் அனுமதிக்க கூடாது.
* தனியார் விடுதிகளில் அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்கி பணப்பட்டுவாடா மற்றும் டோக்கன் வினி யோகம் செய்வது போன்ற நடைமுறையில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட விடுதி உரிமையாளர்கள் உடனடியாக போலீசுக்கும், தாலுகா அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
* விதிமுறைகளை மீறும் திருமண மண்டப உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 123-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.
Comments