ஜெயலலிதா இன்று (ஆகஸ்ட் 25) வெளியிட்ட அறிக்கை: மாநில தலைமை தகவல் ஆணையரை தேர்ந்து எடுக்கும் கூட்டத்தில் நான் கலந்து கொள்ளாதது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற அளவில் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி பேட்டி அளித்து இருப்பதை பார்க்கும் போது, ‘முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல்’ என்ற பழமொழிதான் என் நினைவிற்கு வருகிறது. உண்மை நிலை என்னவென்றால், புதிய மாநில தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்யும் கூட்டத்தில் நியமனக் குழு உறுப்பினர் என்ற முறையில் எதிர்க்கட்சித் தலைவராகிய எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பினை ஏற்று கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்று நான் எண்ணியிருந்தேன்.