ஜெயலலிதா இன்று (அக்டோபர் 27) வெளியிட்ட அறிக்கை: தி.மு.க. அரசினுடைய அமைச்சர்களின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது, சட்டம்-ஒழுங்கை காக்கக்கூடிய அரசாக இல்லாமல், சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கக்கூடிய அரசாக தி.மு.க. அரசு விளங்குகிறது என்பது தெளிவாகிறது.
மதுரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.