Skip to main content

பிரதமர் கலந்து கொள்ளும் தமிழக அரசு விழா திடீர் ரத்து

சென்னை அடையாறு ஏரியாவில் உள்ள பூங்காவை பல கோடி ரூபாய் செலவில் கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசு மேம்படுத்தி வருகிறது. 'அடையாறு பூங்கா' என்ற பெயரில் அமைக்கப்பட்ட இந்த பூங்காவை பிரதமர் மன்மோகன் சிங் ஜனவரி 3ம் தேதி திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்து ராசா அமைச்சர் பதவி ராஜினாமா வரை போன நிலையில் இந்த விழா எதிர்ப்பார்ப்பை கூட்டியிருந்தது. ஆனால் திடிரென்று இந்த நிகழ்ச்சியை பிரதமர் மன்மோகன் சிங் ரத்து செய்திருக்கிறார்.


இந்த பூங்காவை பிரதமர் மன்மோகன் சிங்தான் திறந்து வைக்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பே தமிழக அரசின் சார்பில் தேதி எல்லாம் வாங்கப்பட்டது. இதற்காக சில மாதங்கள் முன்பு டெல்லி வரை போய் பிரதமரை சந்தித்து பூங்கா திறப்பு விழாவிற்கு ஒப்புதல் எல்லாம் வாங்கி வந்தார் முதல்வர் கருணாநிதி.  ஸ்பெக்டரம் விவகாரம் சுப்ரீம் கோர்ட் வரை போய் நாடாளுமன்றமே நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு, சி.பி.ஐ. ரெய்டு, விசாரணை என்று ஜெட் வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இந்த விழா ரத்து செய்யப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்புகின்றன.

இதுபற்றி தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பு:
சுற்றுச் சூழல் பூங்காவைத் திறந்து வைப்பதற்காக பிரதமரை  தமிழக அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.  த‌மிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மைக் குழுமம் இந்த பூங்காவை அமைப்பதற்கான தனது பரிந்துரையை மத்திய அரசுக்கு ஏற்கனவே அனுப்பியிருந்தது. ஆனால் மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் தற்பொழுதுவரை பெறப்படாததால் பிரதமர் ஜனவரி 3ம் தேதி இந்திய அறிவியல் மாநாட்டில் பங்கற்பதற்காக சென்னை வரும் போது பூங்கா திறப்பு நிகழ்ச்சியை சேர்க்கவில்லை. எனவே சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைக்கப்பெற்ற பின்பு இந்த பூங்கா திறந்து வைக்கப்படும் என்று செய்தி குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

விழாவிற்காக அழைப்பிதழ்கள் எல்லாம் தயாரிக்கப்பட்டு பூங்காவை திறப்பதற்காக இறுதிக்கட்ட வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது இப்படி விழா ரத்து செய்வதற்கு காரணம் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்குள் நடக்கும் உரசல்கள்தான் என்று சொல்லப்படுகின்றன.

ராகுல் காந்தி கடந்த வாரம் தமிழகம் வந்து போனார். அதற்கு முன்பு தி.மு.க.வை விமர்ச்சித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதற்கு வீரபாண்டி ஆறுமுகம் பதிலடி கொடுத்திருந்தார். இதற்கும் இளங்கோவன் சளைக்காமல் பதில் சொன்னார்.  என்னவோ தெரியவில்லை. கூட்டணி இடியாப்ப சிக்கலை விட மோசமாகதான் இருக்கிறது.

Comments

butterfly Surya said…
கூட்டணி இப்போது உடையாது. புலி வாலை பிடித்த கதையாகதான் தி.மு.க. இப்போது இருக்கிறது. மத்திய அரசுக்கு தி.மு.க. வாபஸ் வாங்கினால் தமிழகத்தில் காங்கிரஸ் தயவில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசு கவிழும். ஜனாதிபதி ஆட்சி வரும்.

ஜனாதிபதி ஆட்சியில் தேர்தல் நடந்தால் தி.மு.க. ஜெயிக்க முடியுமா? என்ன நடந்தாலும் தாங்கிக் கொண்டுதான் இருப்பார் கருணாநிதி

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி...

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.