Skip to main content

ஸ்பெக்ட்ரம் பலூன் 'புஸ்" ஆகி விடும்: வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இன்று (டிசம்பர் 22) வெளியிட்ட அறிக்கை:

தொலைத்தொடர்புத் துறையின் தற்போதைய அமைச்சர் கபில்சிபல் நேற்றிரவு தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பல்வேறு திடுக்கிடக் கூடிய தகவல்களை ஆணித்தரமான முறையில் விளக்கியுள்ளார்.1999ம் ஆண்டில் - பாரதீய ஜனதா ஆட்சியில், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் - கடைப்பிடிக்கப்பட்டதொலைத்தொடர்பு கொள்கையினால், மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகை ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடியாகும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு சம்பந்தமாக இந்த இழப்பு - இது இப்போது சொல்லப்படுவது போன்ற கற்பனையின் அடிப்படையில் சொல்லப்படும் தொகை அல்ல; நடைமுறைக் கணக்குப்படி ஏற்பட்ட இழப்புத் தொகையாகும்.

9.12.2010 அன்று சென்னைப் பொதுக்கூட்டத்தில் நாம் பேசியபோது, இதுபற்றிய விசாரணை 2001 முதல் தொடங்குவதைவிட நியாயமாகப் பார்த்தால் 1999ம் ஆண்டு முதலே தொடங்கப்படல் வேண்டும் என்று வற்புறுத்தினோம். காரணம், அப்போது வெளியான ‘நியூ ஏஜ்’ ஏட்டின் கட்டுரை ஒன்றில் ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் வாஜ்பாய் ஆட்சியில் தொலைத் தொடர்புத்துறையில் இழப்பு - ஊழல் என்று வெளிவந்தது. இதைச் சுட்டிக்காட்டினோம். மத்திய அமைச்சர் கபில்சிபல் இதனைக் கூறுவதோடு, எப்படி இது ஏற்பட்டது என்பதையும் விளக்கியுள்ளார்.

ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்த ஏலத்தில் விடும் கொள்கைக்குப் பதிலாக, வருவாயில் பங்கு என்ற அடிப்படையில், ஒதுக்கீடு மாற்றப்பட்டதுடன், 10 ஆண்டுகாலத்துக்கு இருந்த லைசென்ஸ்
முறையை 20 ஆண்டுகளுக்கு அப்போது உயர்த்தி ‘சலுகை’ காட்டப்பட்டது. யூகத் தொகை நட்டம் - இன்றைய கணக்கு ஆய்வு அதிகாரி அறிக்கைப்படி ரூபாய் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி - இதை அவரே விவாதித்து முடிவு செய்யலாம் என்று முடித்துக் கையொப்பமிட்டுள்ளார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பிரமோத் மகாஜனுக்கு அடுத்து, அத்துறைக்கு அமைச்சரான அருண்ஷோரி (2001 இல்)கூற்றுப்படி, உத்தேச இழப்பு இப்போது ரூ.30,000 கோடிதானே ஒழிய, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அல்ல என்று கூறியுள்ளார் - சில நாள்களுக்குமுன் சென்னைக்கே வந்து 21 அக்டோபர் 2009ல் பதிவான வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் சி.பி.ஐ.யால் குறிப்பிடப்பட்ட தொகையோ 22,000 கோடி ரூபாய்தான் உத்தேச இழப்பு என்பதும் சுட்டிக்காட்டப்படவேண்டும்.

பா.ஜ.க.ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட இழப்பு - ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் என்றால், எது அதிகமானது? அதில்கூட கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது ரூ.1,76,000 கோடி இழப்பு வெறும் யூகத்தின் அடிப்படையில், அது ரூ.22,000 கோடி என்ற சி.பி.ஐ. அறிக்கை முரணானது. பா.ஜ.க. காலத்திய ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடித் தொகை இழப்பு பெரிய தொகையா? 22,000 கோடி ரூபாய் இழப்பு பெரிய தொகையா? ஒரு பொய்யையே திரும்பத் திரும்பக் கூறினால், அது மெய்யாகி விடுமா? ஏற்கெனவே 2001ல் பா.ஜ.க. அமைச்சரவையில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுப் படிதானே,அமைச்சர் ராசா காலத்திலும் செயல்பட்டிருக்கிறார்கள்.

அதுவும்கூட ‘டிராய்’ என்ற அந்த அமைப்பை மீறியா செயல்பட்டிருக்கிறது ராசாவின் அமைச்சகம்? 2001ல் 3 கோடி தொலைப்பேசி பயனாளிகளாக இருந்தது 2009ல் (அமைச்சர் ராசா காலம்) இது 79 கோடியாக உயர்ந்து, நாட்டின் தொழில் வர்த்தகப் புரட்சிக்கும் உதவியது என்பதைக் குறிப்பிடத் தவறவில்லை அமைச்சர் கபில்சிபல். மிகக் குறைந்த லைசென்ஸ் தொகை 1658 கோடி ரூபாய்தான் ஒரு போட்டியாள் ஒருமுறை நுழைய என்பது 2001 முதல் 2009 வரை இருந்தது என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார் - அந்தப் பேட்டியில்.இப்படிப் பல்வேறு செய்திகள் வெளியே வரவிருப்பதால்தான் பா.ஜ.க.வினர் அந்த விசாரணையை ஏற்க மறுக்கின்றனர் அல்லது தயங்குகின்றனர்.

ஜே.பி.சி.என்று திரும்பத் திரும்ப எதிர்க்கட்சிகள் கோஷ்டிகானம் பாடிக் கொண்டுள்ளனரே என்றுகேட்டபோது, அமைச்சர் கபில்சிபல் மிகவும் தெளிவாகப் பதிலளித்துள்ளார். பொதுக்கணக்குக்குழு தனது விசாரணையைத்தொடங்கி செயல்படும் நிலையில், இந்தக் கோரிக்கை அர்த்தமற்றது; உள்நோக்கம் கொண்டது.பிரதமர் தானே, வழமைக்கு மாறாக, அக்குழுவின் முன் ஆஜராகி விசாரணைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளவும் தயார் என்று கூறிய பிறகும், ஏன் பிடிவாதம் இவர்களுக்கு எனக் கேட்ட கபில்சிபல், சி.பி.ஐ. எப்படி விசாரணையை நடத்துவது என்பதை உச்சநீதிமன்றமே கண்காணித்து ஆணை வழங்குவதைவிட ஜே.பி.சி. அதிகமாகச் செயல்பட்டுவிட முடியுமா? முடியாதே! பின் ஏன் இந்தக் கோரிக்கை என்றால், இதை வைத்து நீட்டி, 2014 தேர்தல் வரை மக்களிடம் இதனைத் தங்களுக்கு ஒரு பிரச்சார மூலதனமாக்கவே எதிர்க்கட்சிகள் முயலுகின்றன.

5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரலில் - இன்னும் 5 மாதங்களுக்குள் வர இருப்பதால் - அதற்கு இதைப் பயன்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் உள்ளூரத் திட்டம் என்பதை நன்கு விளக்கி விட்டார்!தூங்குகிறவர்களைத்தான் தட்டி எழுப்ப முடியும்; தூங்குவதுபோல பாசாங்கு செய்பவர்களை எப்படி எழுப்ப முடியும் என்பதுபோல,எல்லாம் தெரிந்துகொண்டே வேறு சரியான வாய்ப்பு இல்லாததால் இதை ஊதி ஊதிப் பெரிதாக்கி அரசியல் லாபம் பெற எண்ணுகிறார்கள். இவர்கள் இப்பிரச்சினையை, ஊதி ஊதி பலூனைப் பெரிதாக்க நினைத்தால், கடைசியில் அது வெடித்து ‘புஸ்’என்று ஆவது நிச்சயம்.

Comments

பொய்யை பொய் என்று திரும்ப திரும்ப சொன்னால் அது புஸ் ஆகிவிடும் தான்.. கடைசி தேதியை அவசரமாக மாற்றியது ஏன்? இதற்கு முதலில் காரணத்தை சொல்லுங்கள் திரு வீரமணி அவர்களே?
Anonymous said…
Date should NOT be Postponed (Extended), then only some can blame that date is extended to give chance for somebody. But in this case date is pre-pone, this is very much ok. If there are limited seats and large number applicants apply well before last date, then tat last date can be Pre-pone.
Prakash said…
This is what I'm saying from begining.. Loss Value reduced fromm 100Rs to 17.5Rs (IN %)

1. This is NOT a Scam and it’s a Revenue Loss. This is because, licenses are not given in action and awarded as per already followed up policy from 1999.
2. This Policy is NOT laid by Raja, it was done in 1999/2000 by then BJP Ministers, even Supreme Court has acknowledged this and asked CBI to look license allocation policy followed from 2001 and TATA also mentioned that most twisting of Telecom policies were happened during NDA Period.
3. The amount mentioned as loss of 1.7 Lack Croes is just exaggerated and inflated one and NOT real value. Because, Action Cost of 3G is used to calculate 2G Value, like using the Price of Basmathi Rice to calculate value of Ordinary Rice. Even Arun Souri (BJP Telecom Min) has mentioned that 1.7 Lack Crores loss is hypothetical, and the loss might be around 30,000 cr (The Hindu dated 19.12.10)
4. Now the Loss value is reduced to just 17.5% of it’s so called initial value 04 1.7 Lack Crores !!!!!
5. There might be some favor done for few companies and this is something very common nowadays. Even in Private/IT companies, while awarding tenders and Purchase Orders to Vendors, favor is shown for some vendors for some gain.
6. Ongoing CBI/SC investigations might damage the image of DMK to little extend as the hype is shown by certain section of media – But the impact will be very limited as the reach of such Medias on the common Voters might be just 10%. After 2 or 3 months, the importance shall be diluted.
7. Also, if really very large amount of Money Gain is involved, the Karunanithi & DMK Top leaders won’t keep & support Raja even after 2 rounds of CBI raids followed by CBI questioning him. Karunanidhi is not foolish to keep Raja if it’s going to have real impact in elections.
8. Finally, is this 2G issue directly effects common voter – The answer is NO. If the Opposition parties highlight the 2G loss, then DMK might counter by saying, because of that only the Mobile Bill in India is the cheapest in the whole world. Even poor and villagers can use mobile phone because of this policy. Loss to the Govt is the Gain for the Common Man, if the licenses are sold at higher price, then that will be charge backed from the Mobile Users Only.
வாஜ்பாய் ஆட்சியிலும் இப்பொழுது நடக்கும் காங்கிரஸ் ஆட்சியிலும் கலைஞர் ஆட்சியில் பங்கு பெற்று இருந்ததால் நடக்கும் பிரச்சனைகள் என்று வீரமணி கூறுகிறாரா ?
Anonymous said…
If the NDA government was following a policy which would bring loss to the exchequer, then any successive Government is expected to review the policy and replace it with a better policy, which will not bring about such loss to the government. What did dayanidhi and Raasa do? Moreover, what the hell the collective responsibility of the then cabinet, in which DMK was a member?
bandhu said…
//1. This is NOT a Scam and it’s a Revenue Loss. This is because, licenses are not given in action and awarded as per already followed up policy from 1999.//
This is a scam because the revenue loss to the government is converted as bribe. explain the Rs. 1 Lakh investment turned into Rs 700 Crore in ONE year by Equus Promoters (name not too sure) where Raja's wife is a partner (owner?)
//2. This Policy is NOT laid by Raja, it was done in 1999/2000 by then BJP Ministers, even Supreme Court has acknowledged this and asked CBI to look license allocation policy followed from 2001 and TATA also mentioned that most twisting of Telecom policies were happened during NDA Period.//
Two things. If NDA is corrupt, it should be implicated too. Agreed that investigation should include that period. As TATA is one of the beneficiary of this, no credit should be given on what they say
//
3. The amount mentioned as loss of 1.7 Lack Croes is just exaggerated and inflated one and NOT real value. Because, Action Cost of 3G is used to calculate 2G Value, like using the Price of Basmathi Rice to calculate value of Ordinary Rice. Even Arun Souri (BJP Telecom Min) has mentioned that 1.7 Lack Crores loss is hypothetical, and the loss might be around 30,000 cr (The Hindu dated 19.12.10)
//
So, it is okay if the loss is 30000 crore?
//
4. Now the Loss value is reduced to just 17.5% of it’s so called initial value 04 1.7 Lack Crores !!!!!
//
Every thing is notional value. what if it is tomorrow mentioned as the revenue loss is 4 Lack Crores?
//
5. There might be some favor done for few companies and this is something very common nowadays.Even in Private/IT companies, while awarding tenders and Purchase Orders to Vendors, favor is shown for some vendors for some gain.
//
You are justifying corruption! If your expectation standard is so low, no questions on this
//
6. Ongoing CBI/SC investigations might damage the image of DMK to little extend as the hype is shown by certain section of media – But the impact will be very limited as the reach of such Medias on the common Voters might be just 10%. After 2 or 3 months, the importance shall be diluted. //
That is why a thorough investigation should be done by a powerful committee as JPC so that it stays in public eyes for longer time
//
7. Also, if really very large amount of Money Gain is involved, the Karunanithi & DMK Top leaders won’t keep & support Raja even after 2 rounds of CBI raids followed by CBI questioning him. Karunanidhi is not foolish to keep Raja if it’s going to have real impact in elections. //
The investigation just started. let us see how things will change.
//
8. Finally, is this 2G issue directly effects common voter – The answer is NO. If the Opposition parties highlight the 2G loss, then DMK might counter by saying, because of that only the Mobile Bill in India is the cheapest in the whole world. Even poor and villagers can use mobile phone because of this policy. Loss to the Govt is the Gain for the Common Man, if the licenses are sold at higher price, then that will be charge backed from the Mobile Users Only.//
I hope you do not believe the theory that the cost of mobile is cheap because of this loss of revenue. If so, how come the Swan and Unitech sold part of their companies for over 6000 crores?

It is the duty of every Indian to bring the guilty to books. Cast, Creed, Color, South / North, Congress / BJP, DMK / ADMK .. all these issues are smoke screens. We should think beyond these.

Popular posts from this blog

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி