தேர்தல் சீசன் தொடங்கிவிட்டால் கட்சிகளுக்கு கொண்டாட்டமோ இல்லையோ கோடம்பாக்கத்தில் கோலாகலம்தான். சினிமாவில் சம்பாதித்துவிட்டு மார்கெட் சரிந்தவர்களுக்கு அடுத்த வருமான ஸ்பாட் ஆகிவிட்டது அரசியல். கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில்தான் சினிமா நட்சத்திரங்களின் படையெடுப்பு அதிகமாக இருந்தது. நாடு முழுவதும் பல நட்சத்திரங்களை களமிறங்கியது பி.ஜே.பி. அதேப் போல் கடந்த 2006 தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க.வில் நிறைய நடிகர்கள் கோதாவில் குதித்தனர்.
2004 நாடாளுமன்றத் தேர்தலில் போது மக்களை கவர... நட்சத்திரங்களை அடுத்தடுத்து களமிறக்கியது பி.ஜே.பி. போட்டிக்கு காங்கிரஸ§ம் நடிகர்களுக்கு வலை விரித்தது. பிரபல பாலிவுட் நடிகைகள் ஜீனத் அமன், நம்தா ஷிரோத்கர் மற்றும் செலினா ஜேட்லி, காமெடி நடிகர் அஸ்ரானி என்று பலரும் காங்கிரஸில் இணைந்தனர். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியில் ராஜ்ய சபா எம்.பி.யாக இருந்த நடிகை ஜெயப்ரதா அதிரடியாக முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். ‘முலாயமின் கொள்கைகள் பிடித்திருந்ததால் சமாஜ்வாடியில் இணைந்தேன். பதவியையோ, அதிகாரத்தையோ எதிர்பார்த்து வரவில்லை.’ என்று அப்போது சொன்னவர் இப்போது இருக்கும் இடம் எங்கே என்பது தெரியவில்லை. தேர்தல் வந்தால் மீண்டும் தலை காட்டுவாரோ? தெரியவில்லை.
2004 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் நிலை என்ன தெரியுமா? எஸ்.எஸ். சந்திரன், ராதாரவி, சி.ஆர். சரஸ்வதி, குண்டுக் கல்யாணம், ஏ.கே. ராஜேந்திரன், தாமு, ஜூனியர் பாலையா, பாண்டியன், கே. கண்ணன், வாசுகி, சூரியகாந்த், பபிதா என்று பலரும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்கள். என்ன புண்ணியம் 40 தொகுதியிலும் அ.தி.மு.க. துடைத்துக் கொண்டு போனது. அ.தி.மு.க. இப்படி என்றால் பி.ஜே.பி.யில் முன்னாள் பா.ம.க. எம்.எல்.ஏ. தீரன், நடிகை பல்லவி, கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், ஆகியோர் சேர்ந்தனர். தேர்தல் முடிந்தும் காணாமல் போய்விட்டார்கள். ஆந்திராவில் தெலுங்கு நடிகர்கள் சுமன், சரத்பாபுவும் கேரளாவில் நடிகர் ஜி.கே.பிள்ளையும் பி.ஜே.பி.யில் சேர்ந்தார்கள்.
கடந்த 2006 தமிழக சட்டசபைத் தேர்தலில் சரத்குமார், காந்திமதி, இயக்குனர்கள் கதிர், பாரதி கண்ணன், சிம்ரன், விந்தியா, கவிஞர் சினேகன், நடன இயக்குனர் ரகுராம், கோவை சரளா, செந்தில், விஜயக்குமார், தாரா, சங்கீதா, பபிதா, இயக்குனர்கள் மனோபாலா, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பு தலைவர் ஃபெப்சி விஜயன், முரளி என்று பெரிய பட்டாளமே அப்போது போயஸ் கார்டனில் ஐக்கியமானது. இந்த பட்டியலில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள்கூட அங்கே இப்போது இல்லை. வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள், சீசன் முடிந்து கிளம்பி போய்விடுவது போல.. ‘அரசியல் சேவை(!)’யை முடித்துவிட்டு கிளம்பிவிட்டார்களோ என்னவோ.
‘‘நான் சாகும் போது என் உடம்பில் தி.மு.க.வின் கொடிதான் போர்த்தப்படும்’’ என்று முழங்கிய நாட்டாமை சரத்குமார் கூட தேர்தல் சமயத்தில் மனைவி ராதிகாவோடு ஜெயலலிதாவிடம் சரண் அடைந்தார். அதன்பிறகு அங்கே கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டு புதுக் கட்சி கண்டார். ‘அகில இந்திய சமுத்துவ மக்கள் கட்சி’ என்கிற பெயர்கூட பலருக்கு தெரியாது. அவரும் கடைவிரித்து தேர்தலை எதிர் நோக்கி இருக்கிறார்.
சரி ஏற்கனவே அ.தி.மு.க.வில் இருந்த மற்றவர்கள் கதி? எஸ்.எஸ். ராஜேந்திரன், எஸ்.எஸ். சந்திரன், ராமராஜன், பாண்டியன், குண்டு கல்யாணம், பாலு ஆனந்த், சி.ஆர்.சரஸ்வதி, இயக்குனர் ஆர்.வி. உதயக்குமார், லியாகத் அலிகான், ராதாரவி என்று ஏற்கனவே இருந்த பழைய முகங்களில் எஸ்.எஸ்.சந்திரன், பாண்டியன் ஆகியோர் இறந்து போனார்கள். பாதிபேர் காணாமல் போய்விட்டார்கள். எப்போது அ.தி.மு.க.வை விட்டு போனார் என்று தெரியவில்லை மீண்டும் கட்சியில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறார் ராதாரவி.
தி.மு.க.விலும் இதே நிலைதான். 2006 தமிழக சட்டசபைத் தேர்தலின் போதுதான் தி.மு.க. சேர்ந்தார் நடிகர் பாக்கியராஜ். அதோடு ஏற்கனவே இருந்த நடிகர்கள் சந்திரசேகர், நெப்போலியன், தியாகு, குமரிமுத்து ஆகியோரும் அப்போது பிரச்சாரத்தில் குதித்தார்கள்.
இதே அடுத்த தேர்தல் நெருங்கிவிட்டது. பார்ப்போம் கோடம்பாக்கத்தில் நடக்க போகும் கூத்தையெல்லாம்.

Comments