Skip to main content

விறுவிறு புதிய சட்டப் பேரவை விழா... 'ஆடு பாம்பே விளையாடு பாம்பே!'

ந்திய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா, தமிழக முதல்வர் கருணாநிதி என்று மேடையில் முப் பெரும் அரசியல் தலைகள் சேர்ந்திருக்க... தமிழகத்தின் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை வளாகத் திறப்பு விழா, ஜம்மென்று நடந்து முடிந் திருக்கிறது..!
மொத்தம் இரண்டு பிளாக்கு கள் கொண்டது இந்த வளாகம். சட்டசபைக்கு ஒன்று... தலைமைச் செயலகத்துக்கு ஒன்று! இதில் சட்டசபை கட்டட வளாகத்தில்தான் விழா. வெளியே நீட்டியபடி இருந்த கம்பிகளும், சிமென்ட் பூச்சு இல்லாத சுவர்களும் 'இன்னும் வேலை முடியவில்லை' என்பதை சொல்லிக் கொண்டே இருந்தன. சில இடங்களில் துணி களைக் கட்டி மறைத்திருந்தார்கள். 'புதிய சட்டசபை திறப்பு விழாவுக்குப் புறப்பட்டு வா...' என்று உடன்பிறப்புக்கு கருணாநிதி கடிதம் எழுதி அழைத்திருக்க... ஏராளமான தொண்டர்கள் குவிந்துவிட்டனர். ஆனால், பிரதமர் வருகையால் அவர்களை போலீஸ் உள்ளே விடாமல் விரட்டியது. உடன் பிறப்புகள் உஷ்ணம் காட்டியும், காக்கிகள் அசரவில்லை!
மேடையே பிரமாண்ட செட் போல போடப்பட்டிருக்க... மேடைக்கு முன்பு நீதிபதிகள், மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.எல்.ஏ-க்கள், சினிமா துறை யினர், முதல்வர் குடும்பத்தினர் என்று பெயர்கள் எழுதி பார்ட் பார்ட்டாக இடம் ஒதுக்கப்பட்டு, இருக்கைகள் போட்டிருந்தன. அமைச்சர்கள் என்று எழுதியிருந்த பகுதியை (என்ன ஆசையோ?) காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். சில காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தயங்கியபடி உட்கார யோசிக்க, ''இப்படியாவது அமைச் சரவையில் இடம் பிடிங்கப்பா!'' என்று ஜாலி கமென்ட்கள் பறந்தன பின்னாலிருந்து. அப்போது அந்த ஏரியாவுக்கு எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ. வர, அவரைத் தொடர்ந்து தொப்பியோடு வந்து அமர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான வசந்தகுமார், ஒரு டி.வி. கேமராமேனைக் கூப்பிட்டு எல்லோரையும் படம் எடுக்கச் சொன்னார். ''இப்படித்தான் வளைச்சு வளைச்சு எடுப் பாங்க... ஆனா, எதுவும் வராது...'' என்று ஒருவர் கமென்ட் அடிக்க, ''இது நம்ம வசந்த் டி.வி... அதனால் நிச்சயம் வரும்!'' என்று கியாரண்டி கொடுத்தார் வசந்தகுமார்.
விழா தொடங்கும் முன்பு வயலின் இசை. 'ஆடு பாம்பே...' என்ற பாடல் வயலினில் வழிந்த கொஞ்ச நேரத்திலேயே, என்ன ஆச்சர்யம்..! அந்த ஏரியாவின் இன்னொரு மூலை யின் பொந்தில் பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடியது! புதிய கட்டடம் கட்ட, பழைய கட்டடங்களை இடித்த இடத்தில், புதர் மண்டி கிடப்பதால் அங்கிருந்துதான் இப்படி பாம்புகள் கிளம்பியதாம்!
மேடைக்கு நேரெதிரில் இருந்த பகுதி முதல்வர் கருணா நிதி குடும்பத்தினருக்காக ஸ்பெஷலாக ஒதுக்கப்பட்டிருந்தது. தயாளு அம்மாள், அழகிரி மகள் கயல்விழி, ஸ்டாலின் மனைவி துர்கா, மு.க.தமிழரசு மற்றும் அவரது மனைவி மோகனா ஆகியோர் அங்கே ஆஜர். கடைசி ஓரத்தில் ராசாத்தி அம்மாள் அமர்ந்துகொண்டார். உடல்நலக் குறைவால் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்த ஆற்காட்டாரும் வந்துவிட்டார். மிகவும் தளர்ந்துபோய் கைத்தாங்கலாக அழைத்து வரப்பட்ட அவரை எல்லோரும் 'நம்ம ஆற்காட்டாரா இது..?' என்று திகைத்துப் போய்ப் பார்த்தார்கள். ஆளுநர் பர்னாலா பெயர் அழைப்பிதழில் இருந் தும் உடல்நலம் காரணமாக அவரால் வர இயலவில்லை. (பின்னணி கிசுகிசுப்பு 'மிஸ்டர் கழுகு' பகுதியில்!) ஆளுநரின் உறவினர்கள் வந்தபோது, முதல்வர் குடும்பத்தினர் இருந்த பகுதியில் இடம் பிடித்துக் கொடுக்க அதிகாரிகள் பெரும்பாடு பட்டனர். அடுத்து, தமிழக முன்னாள் கவர்னர் பி.சி.அலெக்ஸாண்டர் தடியை ஊன்றியபடி மெதுவாக நடந்து வந்தார். அவரை முன்வரிசையில் உட்காரவைக்க அழைத்துப் போனார்கள். 'முன்னாள் கவர்னர்' என்று சொல்லியும், யாருமே எழுந்து ஸீட் தரவில்லை. அவரை அலைக்கழித்தபடியே ஸீட் தேடு வதைப் பார்த்த துணை முதல்வர் ஸ்டாலின், அவருக்கு முன்வரிசையில் ஸீட் போட்டு அமரவைத்தார். நீதிபதிகள் இருந்த பகுதிக்கு சென்ற ஸ்டாலின், ''ஏற்பாடுகள் எப்படி இருக்கிறது... வசதிகள் சரியாக இருக்கிறதா?'' என்று அக்கறையாக விசாரித்தார். ''நேற்று இரவுதான் எல்லா ஸீட்டிலும் நீதிபதிகளின் பெயர்களை எழுதிவைக்கச் சொன்னேன்!'' என்று தாமாகவே சொல்லிவிட்டும் சென்றார்.
நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்தும் ரஜினி, கமல் உட்பட பல நடிகர்-நடிகைகள் ஆப்சென்ட். நடிகர் விஜய், வடிவேலு, ரம்பா, சரத்குமார்ஆகியவை பளிச்சென்று தெரிந்த தலைகள். நடிகர் எஸ்.எஸ்.ஆர். வந்தபோது, அவரை சினிமா துறையினர் இருந்த பகுதியில் அமரவைக்க... அவரோ, ''சினிமாவில் இருந்து சட்டமன்றத்துக்குப் போன முதல் நடிகன் நான்தானப்பா. நான் முன் வரிசையில் உட்கார வேண்டும்!'' என்று சொல்ல... அவரது ஆசை நிறைவேற்றப்பட்டது.
விழா தொடங்குவதற்கு முன்பு சபாநாயகர் ஆவுடையப்பன், கவர்னர் பர்னாலா, மன்மோகன் சிங், சோனியா, கருணாநிதி, தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி ஆகியோருக்காக 6 இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன! விழா தொடங்குவதற்கு முன்பு, கவர்னருக்கான இருக்கையில் துணை முதல்வர் ஸ்டாலினை அமரவைக்கலாமா என்றும் மேடையில் சின்ன டிஸ்கஷன் நடந்ததாம். அழகிரியும் விழாவில் வந்து பார்வையாளர் வரிசையில் அமர்ந் திருக்க... ஸ்டாலினை மேடையேற்றும் ஐடியா கைவிடப்பட்டதாகத் தெரிகிறது.
புதிய சட்டசபையைத் திறந்து வைத்து, பேட்டரி காரில் சுற்றிப் பார்த்து, மரக் கன்றுகள் நட்டு விட்டு பிரதமர் மன்மோகன், சோனியா சகிதமாக விழா மேடைக்கு வந்தார் கருணாநிதி. இப்படி விழாக்களில் பங்கேற்கும் போதெல்லாம் மேடை வரை கருணாநிதி மோட்டார் நாற்காலியில் வருவதுதான் வழக்கம். ஆனால், இந்த விழாவுக்கு மன்மோகன், சோனியாவுடன் நடந்தே வந்தார். அதேபோல் தமிழ்த்தாய் வாழ்த்தின்போதும் தேசிய கீதம் இசைக்கும்போதும் கருணாநிதி இருக்கையில் இருந்து எழுந்து நின்றதை பலரும் ஆச்சர்யத்தோடு பார்த்தனர். மேடையில் ஸீட்டில் உட்கார்ந்தபடியே மன்மோகனுக்கும் சோனியாவுக்கும் சால்வை போட்டார் முதல்வர். சால்வை போர்த்த வசதியாக தலைகுனிந்து வணங்கி, புன்னகையோடு வாங்கிக்கொண்டனர் இருவரும். வழக்கத்துக்கு மாறாக இன்னொரு விஷயம்... எப்போதுமே எழுதிவைத்ததைப் படிக்க மாட்டார் கருணாநிதி. ஆனால், இந்த விழாவில் தயாராக எழுதி வைத்திருந்ததைப் படித்தார். அவர் படிக்க ஆரம்பித்ததும், அதை ஆங்கிலத்திலும் தமிழிலும் தயாராக அச்சிட்டு வைத்த புத்தகமாகவே விழாவில் வழங்கினார்கள்.
''மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிடும் திட்டத்துக்கு மத்திய அரசு உதவிட வேண்டும்...'' என்று கோரிக்கை வைத்தார் முதல்வர். ''பெண்கள் இடஒதுக்கீடு மசோதா கருணாநிதி உதவியில்லாமல் நிறைவேற்றியிருக்க முடியாது...'' என்று சொன்னார் சோனியா. ''இந்தியா விலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது!'' என்று புகழாராம் சூட்டினார் பிரதமர். சபாநாயகர் ஆவுடையப்பன் உட்பட பேசிய எல்லாருமே எழுதி வைத்துப் படித்தார்கள். விழா முடிந்ததும் புதிய கட்டடத் தில் நுழைய பலரும் முயல... பத்திரிகையாளர்கள் உட்பட யாருமே அனுமதிக்கப்படவில்லை. ''கட்டி முடிக்கப்படாத கட்டடத்துக்கு விழா எடுத்திருக்கிறார்கள்... அது மீடியாக்களில் வந்தால், பிரதமர் - சோனியா மீதான விமர்சனமாகக்கூட மாறலாம் என்று நினைக்கிறார்களோ என்னவோ..!!'' என்று மீடியா ஆட்கள் கமென்ட் அடித்த படியே கலைந்தனர்.
''காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்குள் உரசல், விரிசல் என்று கொஞ்சங்காலமாக பேச்சுகள் ரவுண்டு கட்டி வந்த நிலையில்தான் இந்த விழா நடந்து முடிந்திருக்கிறது. 'எங்கள் கூட்டணியைப் பிரிக்க முடியாது. நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்' என்பதை ஊருக்கு உரக்கச் சொல்லவே இப்படி விழா எடுத்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள்... காங்கிரஸுடன் கூட்டணியை தி.மு.க. தொடர்வது குறித்த தனது உருக்கமான உணர்வுகளை தான் வெளிப்படுத்தும்போது, அது மிகச் சரியாக சோனியாவுக்கும் பிரதமருக்கும் போய்ச் சேரவேண்டும் என்று நினைத்ததாலேயே... தன் உரையை எழுதி வைத்துப் படித்ததோடு, அதை ஆங்கிலத் திலும் மொழிபெயர்த்து அவர்களுக்குக் கொடுக்கச் செய்திருக்கிறார் தலைவர்!'' என்று சொன்னார்கள் விவர மான சில தி.மு.க-வினர்.
சோனியாவும், ''ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உருவானதில் இருந்தே எனக்கு வலிமையும், நம்பிக்கையும் தரக்கூடிய முக்கியத் தூணாக இருப்பவர் கருணாநிதிதான். மத்திய அரசுக்கு சின்னப் பிரச்னை என்றாலோ, தேசியப் பிரச்னை என் றாலோ மன்மோகன் சிங் உடனடியாக டெலிபோனில் தொடர்புகொள்ளும் முதல் நபர் கருணாநிதிதான். அவரது ஆதரவையும், அறிவார்ந்த ஆலோசனைகளையும் நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்....'' என்று பதில் மரியாதை செய்து விட்டுப் போனார்.
56-லும் ஆட்டம் வரும்!
சட்டசபை திறப்பு விழாவுக்கு அடுத்த நாள்... கட்டிய தொழிலாளர்களுக்கு, அதே மேடையில் பிரியாணி விருந்து; கூடவே, ஆடல்-பாடல் கலை நிகழ்ச்சிகளும்! தொழிலாளர் கள் பெரும்பாலும் வட இந்தியாவினர் என்பதால், இந்திப் பாடல்கள்தான் அதிகம் ஒலித்தன. அதனால், ஏக கிளாப்ஸுடன் மெகா ஆட்டம் போட்டனர். அமிதாப்பச்சன் நடித்த 'டான்' படத்தில் இருந்து 'காய்கே பான் பனாரஸ்வாலா' என்ற பாட்டு (ரஜினியின் 'வெத்தலைய போட்டேண்டீ...' பாட்டு மாதிரி!) பட்டையைக் கிளப்ப... பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் ராமசுந்தரம் திடீரென கோதாவில் குதித்து, துள்ளாட்டம் போட்டதை யாருமே எதிர்பார்க்கவில்லை..! ரொம்ப லோக்கலாகவும் நேர்த்தியாகவும் மூவ்மென்ட்ஸ் வைத்து குத்தாட்டம் ஆடினார், ஐ.ஏ.எஸ். அதை கனிமொழி, ஜாஃபர் சேட், 'இந்து' ராம், போலீஸ் அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என்று ஒரு பட்டாளமே சிரிப்பும் கைதட்டலுமாக ரசித்தது. கவனிக்க- வரும் ஏப்ரலில் ராமசுந்தரத்துக்கு 56 வயது நிறைகிறது.
புது சட்டசபை கட்ட ஆரம்பித்ததில் இருந்து, முதல்வர் கேட்கும் அத்தனை சந்தேகங்களுக்கும் ஈடு கொடுத்து... அதற்கேற்ப மாற்றங்கள் செய்து... கவனம் செலுத்தி வருகிறார் ராமசுந்தரம். 'ஒருவழியா முதல்வர் வைத்த டெஸ்ட்டில் ஜெயிச்சாச்சு' என்ற ரிலாக்ஸில் ஆடினாரோ என்னவோ..! இந்த ஆட்டம் பற்றி பிறகு முதல்வர் அங்கு வந்ததும் அதிகாரிகள் சொல்ல... ''ஆஹா, நான் பார்க்காமப் போயிட்டேனே..!'' என்று ஜாலியாகச் சிரித்தாராம், இதுவரை ராமசுந்தரத்தை ஆட்டி வைத்த முதல்வர். அந்தப் பிரியாணி விருந்தில் 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இருந்தனர். சென்னையின் பிரபலமான புஹாரி ஹோட்டலில் இருந்துதான் ஆர்டர் தந்தார்களாம். 'ஒரு பிரியாணிக்கு 90 ரூபாய்' என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லிக் கொண்டார்கள்!
- எம்.பரக்கத் அலி
படங்கள் சு.குமரேசன், பொன்.காசிராஜன், கே.கார்த்திகேயன்

கட்டுரையின் ஒர்ஜினலை பார்க்க
https://www.vikatan.com/juniorvikatan/2010-mar-21/politics/51764.html

Comments

Popular posts from this blog

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா

திருச்சி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. மணப்பாறை தொகுதி மணப்பாறை தாலுக்கா (பகுதி) புதூர், வையமலைப்பாளையம், வெள்ளாளப்பட்டி, அனியாப்பூர், வீரமலை (ஆர்.எப்), சீகம்பட்டி, உசிலம்பட்டி, பொய்கைமலை (ஆர்.எப்), வடுகப்பட்டி, வேங்கைக்குறிச்சி, அமையபுரம், அமையபுரம் (ஆர்.எப்), நல்லாம்பிள்ளை, ஜை.கோவில்பட்டி, வி.பெரியப்பட்டி, தவளவீரம்படி, முகவனூர் (வடக்கு), முகவனூர் (தெற்கு), செக்கனம், பழையங்கோட்டை, ஐ.ரெட்டியாப்பட்டி, செட்டியாப்பட்டி, மலையாண்டிப்பட்டி, பொய்கைப்பட்டி, சாம்பட்டி, சுலியாப்பட்டி, ஆதம்பட்டி, எப்.கீழையூர், தொட்டியப்பட்டி, தாதனூர், ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகம்பட்டி, பண்ணப்பட்டி, (கிழக்கு), பண்ணப்பட்டி (மேற்கு), அயன்ரெட்டியாப்பட்டி, வையம்பட்டி, மூக்குரெட்டியாப்பட்டி, குமாரவாடி, நடுப்பட்டி, புதுவாடி, புதுக்கோட்டை, பொன்னம்பலப்பட்டி, எலமணம், கண்ணூத்து, குமரிக்கட்டிமலை (ஆர்.எப்), கருப்பூர், புத்தாநத்தம் திருநெல்லிப்பட்டி, வெள்ளையக்கோன்பட்டி, பிராம்பட்டி (வடக்கு), பிராம்பட்டி (தெற்கு), தேனூர், அயன்புதுப்பட்டி, ஊத்துக்குளி, வேம்பனூர், கண்ணுக்குழி, கொடும்பப்பட்டி, பல்லக்குறிச்சி, கலிங்கப்பட்டி கிழக்கு, பழுவஞ்சி மேற்கு, முத்தாழ்வார்பட்டி,