Skip to main content

Posts

Showing posts from December, 2010

தீர்ப்பை மாற்றிய நாட்டாமை!‘‘

‘‘சாகும் வரை தி.மு.க.வில்தான் இருப்பேன். என் உடலில் தி.மு.க. கொடிதான் போர்த்தப்படும்.’’  2006 தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு நடந்த தி.மு.க. மண்டல மாநாட்டில் இப்படி முழுங்கினார் திரைப்பட நடிகர் சரத்குமார். அடுத்து சில நாட்களில் தி.மு.க.வில் இருந்து விலகினார். அதே சூட்டோடு அ.தி.மு.க.வில் தஞ்சமடைந்தார். 2006 சட்டசபைத் தேர்தலில் நடந்த மிகப் பெரிய கூத்து இது.

கூட்டணி முடிவு: ஜெயலலிதாவுக்கு பொதுக்குழு அதிகாரம்

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று மாலை (டிசம்பர் 30) சென்னை வானகரம் ஏரியாவில் நடைபெற்றது. முதலில் செயற்குழு கூட்டம் முடிந்து அதன்பிறகு பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மொத்தம் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் கூட்டணி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் முக்கியமான தீர்மானம்.

பிரதமர் கலந்து கொள்ளும் தமிழக அரசு விழா திடீர் ரத்து

சென்னை அடையாறு ஏரியாவில் உள்ள பூங்காவை பல கோடி ரூபாய் செலவில் கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசு மேம்படுத்தி வருகிறது. 'அடையாறு பூங்கா' என்ற பெயரில் அமைக்கப்பட்ட இந்த பூங்காவை பிரதமர் மன்மோகன் சிங் ஜனவரி 3ம் தேதி திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்து ராசா அமைச்சர் பதவி ராஜினாமா வரை போன நிலையில் இந்த விழா எதிர்ப்பார்ப்பை கூட்டியிருந்தது. ஆனால் திடிரென்று இந்த நிகழ்ச்சியை பிரதமர் மன்மோகன் சிங் ரத்து செய்திருக்கிறார்.

க‌ட்டாய‌ ம‌த‌ மாற்ற‌ த‌டை ச‌ட்ட‌த்தை ர‌த்து செய்துதான் நான்தான்: ஜெய‌ல‌லிதா

ஜெய‌ல‌லிதா இன்று (டிச‌ம்ப‌ர் 29) வெளியிட்ட அறிக்கை: கருணாநிதி 2006ல் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகுதான் "தமிழ் நாடு கட்டாய மதமாற்ற தடைச் சட்டம்" நீக்கம் செய்யப்பட்டது என்ற ஒரு தவறான செய்தி பிரபல நாளிதழ்கள் சிலவற்றில் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தவறான செய்தி குறித்து சிறுபான்மை இன மக்கள் தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் கீழ்க்கண்ட நிகழ்வுகளை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு உள்ளேன்.

தி.மு.க. ஆட்சிக்கு மரண அடி: ஜெயலலிதா பேச்சு

எம்.ஜி.ஆரின் 23-ஆவது ஆண்டு நினைவு நாளில் இன்று (டிசம்பர் 24) எம்.ஜி.ஆர். சமாதியில் அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சமாதியில் மலர் வளையம் வைத்து ஜெயலலிதா அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

க‌ர்த்த‌ர் அருளால் அ.தி.மு.க‌. ஆட்சி: கிறிஸ்தும‌ஸ் விழாவில் ஜெ பேச்சு

அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கத்தின் சார்பில், கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பேரூராட்சியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் ஜெயலலிதா இன்று (டிசம்பர் 23)கலந்து கொண்டார்.இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருவனந்தபுரம் சென்றார் ஜெயலலிதா. அங்கு, கேரள மாநில அ.தி.மு.க. சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஸ்பெக்ட்ரம் பலூன் 'புஸ்" ஆகி விடும்: வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இன்று (டிசம்பர் 22) வெளியிட்ட அறிக்கை: தொலைத்தொடர்புத் துறையின் தற்போதைய அமைச்சர் கபில்சிபல் நேற்றிரவு தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பல்வேறு திடுக்கிடக் கூடிய தகவல்களை ஆணித்தரமான முறையில் விளக்கியுள்ளார்.1999ம் ஆண்டில் - பாரதீய ஜனதா ஆட்சியில், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் - கடைப்பிடிக்கப்பட்டதொலைத்தொடர்பு கொள்கையினால், மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகை ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடியாகும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு சம்பந்தமாக இந்த இழப்பு - இது இப்போது சொல்லப்படுவது போன்ற கற்பனையின் அடிப்படையில் சொல்லப்படும் தொகை அல்ல; நடைமுறைக் கணக்குப்படி ஏற்பட்ட இழப்புத் தொகையாகும்.

பாதிப்பை ஏற்படுத்தாத பார்வர்டு பிளாக்!

2006 சட்டசபைத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி அதிக எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியது. காரணம் அப்போது அந்த கட்சியின் தலைவராக இருந்த நடிகர் கார்த்திக்தான். கோபாலபுரம், போயஸ் கார்டன் என்று இரண்டு இடங்களிலும் கூட்டணிக்காக அலைந்து கடைசியில் தனியாக களமிறங்கியது பார்வர்டு பிளாக். தென் மாவட்டங்களில் பார்வர்டு பிளாக்குக்கு கனிசமான செல்வாக்கு இருந்த நிலையில் கார்த்திக்கின் வரவும் சேர்ந்து கொள்ள தேர்தலில் பார்வர்டு பிளாக் பாதிப்பை உண்டாக்கலாம் என்று கணிக்கப்பட்டது. ஆனால் இந்த கணிப்பு பொய்யாகி போனது.

ராசா மீது ந‌ட‌வ‌டிக்கையா? க‌ருணாநிதி பேட்டி

முத‌ல்வ‌ர் கருணாநிதி இன்று (டிச‌ம்ப‌ர் 20) சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கேள்வி: சி.பி.ஐ. சார்பில் இரண்டாவது முறையாக தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் ராஜா நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் எல்லாம் சோதனை நடைபெற்றுள்ளதே? பதில்: இன்றைக்கா சோதனை நடந்துள்ளது. உங்கள் வீட்டில் ஏதோ சோதனை நடந்ததைப் போல பதற்றம் காட்டுகிறீர்களே?

தேர்தலில் அரசியல் வாரிசுகள்!

2006 சட்டசபைத் தேர்தலில் நிறைய அரசியல் வாரிசுகள் களமிறங்கின. அவர்களை பற்றி குறிப்புகள் இங்கே... * மறைந்த தி.மு.க. அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் மகன் அன்பில் பெரியசாமி. இவரது சகோதரர் அன்பில் பொய்யாமொழி மறைவுக்குப் பிறகு, அன்பில் பெரியசாமி திருச்சி - 1 தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். * மறைந்த தி.மு.க. அமைச்சர் தங்கப்பாண்டியின் மகன் தங்கம் தென்னரசு. அருப்புக்கோட்டையில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். பிறகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் ஆனார்.

ராசாவுக்கு முன்பு இருந்தவர்களும் புனிதமான துறவிகள் இல்லை: ஜெயலலிதா அறிக்கை

ஜெயலலிதா இன்று (டிசம்பர் 17) வெளியிட்ட அறிக்கை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். 2001ம் ஆண்டு முதலான தொலைத் தொடர்புத் துறையின் நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக விசாரணை அமைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளதையும் நான் வரவேற்கிறேன். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கு விசாரணையில் இந்த நாட்டின் முதன்மை விசாரணை அமைப்பான மத்திய புலனாய்வு அமைப்பு வேண்டுமென்றே மெத்தனப் போக்கினை கடைபிடித்ததன் காரணமாகத்தான் இது போன்றதொரு உத்தரவினை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டியதாயிற்று.

தேர்தலில் நடிகர்கள்!

தேர்தல் சீசன் தொடங்கிவிட்டால் கட்சிகளுக்கு கொண்டாட்டமோ இல்லையோ கோடம்பாக்கத்தில் கோலாகலம்தான். சினிமாவில்  சம்பாதித்துவிட்டு மார்கெட் சரிந்தவர்களுக்கு அடுத்த வருமான ஸ்பாட் ஆகிவிட்டது அரசியல். கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில்தான் சினிமா நட்சத்திரங்களின் படையெடுப்பு அதிகமாக இருந்தது. நாடு முழுவதும் பல நட்சத்திரங்களை களமிறங்கியது பி.ஜே.பி. அதேப் போல் கடந்த 2006 தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க.வில் நிறைய நடிகர்கள் கோதாவில் குதித்தனர்.

பிறை (முஸ்லிம் லீக்) சூரியனை (தி.மு.க.) விட்டு அகலாது: கருணாநிதி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு இன்று (டிசம்பர் 11) சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை : தி.மு. கழகமும் இஸ்லாமியர்களுடைய பாசறையாக விளங்குகின்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கமும் இன்று நேற்றல்ல, நீண்ட நெடுங்காலமாக நெருங்கிய உறவு கொண்ட சமுதாய, அரசியல் பேரியக்கங்கள் என்பதை நீங்கள் அனைவரும் மிக நன்றாக அறிவீர்கள். இங்கே நம்முடைய விழாத் தலைவர் - மாநாட்டுத் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் பட்டத்தை, விருதினை எனக்கு வழங்கும்போது அவருடைய அழகான முத்து முத்து போன்ற இனிய தமிழால் அதைப் படித்தளித்தார்கள்.

“கை”யும் கை நழுவிப் போய்விடுமோ.. ஜெயலலிதா அறிக்கை

முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளித்து ஜெயலலிதா இன்று (டிசம்பர் 11) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அறிக்கை விவரம்: “கை”யும் கை நழுவிப் போய்விடுமோ என்ற அச்சத்தில், தி.மு.க. - காங்கிரஸ் இடையே சிண்டு முடிய நான் முயற்சிப்பதாக ஒரு புனைசுருட்டு அறிக்கையை கருணாநிதி வெளியிட்டு இருப்பது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் ஆகும்.