அ.தி.மு.க. சார்பில் இன்று (ஆகஸ்ட் 18) சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வைகோ, சி.பி.ஐ. தமிழ் மாநில செயலாளர் தா. பாண்டியன். சி.பி.எம்.யை சேர்ந்த என். வரதராஜன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஜவாஹிருல்லாஹ், ஹைதர்அலி, டாக்டர் கிருஷ்ணசாமி, உட்பட பலர் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசியதாவது:
மதத்தின் மீது மாறாப் பற்று வைத்தல், குர்ஆன் ஓதுதல், நோன்பு இருத்தல், தர்மம் செய்தல், ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளுதல் ஆகியவை இஸ்லாத்தின் ஐந்து தூண்களாகும்.இஸ்லாமியப் பெருமக்களுக்கு இறைவனால் இடப்பட்ட கட்டளை நோன்பு! பெரியவர் முதல் சிறியவர் வரை உணவு உண்ணாமல், நீர்கூட பருகாமல் நோன்பினை மேற்கொண்டு உள்ளத் தூய்மையுடன் இறைவனை வழிபட்டு, இல்லாதார்க்கு தர்மம் செய்யும் பேரு இந்த ரமலான் மாதத்தில்தான் கிடைக்கிறது. இந்நோன்பிருத்தல் மூலம் இறைப் பற்று அதிகமாவதுடன், அறிவியல் அடிப்படையிலும் மிகச் சிறந்த பயனளிக்கிறது. பிறருக்கு உதவி செய்து வாழ்பவர்களை காலம் என்றும் ஏற்றிப் புகழும் என்பதற்கு ஒரு சிறு கதையை சொல்கிறேன்.
ஒரு முறை கால்பந்து, இறைவனிடம் போய் முறையிட்டதாம். "நானும் புல்லாங்குழலும் காற்றை மையமாக வைத்துத்தான் இயங்குகிறோம். புல்லாங்குழலை எல்லோரும் உதட்டோடு வைத்து கொஞ்சுகிறார்கள். ஆனால், என்னை மட்டும் எல்லோரும் எட்டி எட்டி உதைக்கிறார்கள். இறைவா! உனது படைப்பில் ஏன் இந்தப் பாகுபாடு?" என்று கால்பந்து ஆதங்கத்தோடு கேட்டதாம். உடனே இறைவன் சொன்னாராம் "நீ சொல்வது உண்மைதான். புல்லாங்குழலும் நீயும் காற்றின் அடிப்படையில் தான் இயங்குகிறீர்கள். புல்லாங்குழல், தான் உள்வாங்கும் காற்றை அழகிய இசையாக உடனே பிறருக்கு கொடுத்துவிடுகிறது. ஆனால், நீயோ, உள்வாங்கும் காற்றை யாருக்கும் கொடுக்காமல் உனக்குள்ளே வைத்துக் கொள்கிறாய். அதனால்தான் உன்னை எல்லோரும் எட்டி எட்டி உதைக்கிறார்கள்."
இந்தக் கதை சொல்லுகின்ற கருத்து என்னவென்றால், கருமிகளை காலம் எட்டி உதைத்துவிடும்; ஆனால், கொடுத்து உதவுகிற ஈகை குணம் கொண்டவர்களை வரலாறு தன் குறிப்பேட்டில் என்றும் பதித்து வைத்துக் கொள்ளும், புகழ்ந்து மகிழும் என்பதுதான். இதனை வலியுறுத்துவது போலவே இஸ்லாம் மதத்தின் இணையில்லா தத்துவங்களில் ஒன்றாகவே பிறருக்கு உதவிடும் உன்னத நோக்கம் இந்த ரமலான் மாதத்தில் அனைவருக்கும் வலியுறுத்தப்படுகிறது. அத்தகைய உயரிய நோன்பினை நோற்கின்ற இஸ்லாமியப் பெருமக்களுக்கு இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை, அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் நடத்துவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். என்றார் ஜெயலலிதா.

Comments