Skip to main content

பிரதீபா பிரசாரத்தில் கூட்டணி குழப்பங்கள்! நேரடி ரிப்போர்ட்..

 2007 ஜூலை 8 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது!

.
பிரதீபா பிரசாரத்தில் கூட்டணி குழப்பங்கள்!
பிரதீபா பிரசாரத்தில் கூட்டணி குழப்பங்கள்!

ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் பிரதீபா பாட்டீல், தன் பிரசாரத்தைத் தமிழகத்தில் இருந்து தொடங்கியிருக்கிறார். பிரதீபா பாட்டீலை ஆதரித்து சென்னையில் தி.மு.க. கூட்டணி சார்பில் மகளிர் பேரணியும் நடந்து முடிந்திருக்கிறது.

ஜூலை 1-ம் தேதி அண்ணா சாலை மன்றோ சிலையில் இருந்து சேப்பாக்கம் வரையில் நடந்த இந்தப் பிரமாண்ட பேரணிக்கு, மதியத்தில் இருந்தே பெண்கள் குவிய ஆரம்பித்துவிட்டனர். ஊர்வலத்தை பிரதீபா பாட்டீல் பார்வையிடுவதற்காக, சிம்சன் அருகே ஒரு ஸ்பெஷல் மேடை

அமைத்திருந்தார்கள். ‘ராஷ்டிரபதி பவன்’ மாடலில் அந்த மேடையை அமைக்க ஐடியா கொடுத்தது கருணாநிதிதானாம். இந்த மேடையை முந்தின நாள் இரவு வந்து பார்வையிட்டார் கருணாநிதி. ராஷ்டிரபதி பவன் மாடலின் கோபுரத்தில் கருணாநிதிக்குப் பிடித்த மஞ்சள்(!) நிறத்தில் கொடி பறந்து கொண்டிருந்தது.

சரியாக மாலை 4.50-க்குக் கருணாநிதியின் கார் மேடை அருகே வந்து நின்றது. உடனே இறங்காமல் சிறிது நேரம் காரிலேயே காத்திருந்தார் கருணாநிதி. அடுத்த சில வினாடிகளில் பிரதீபா பாட்டீலை மத்திய அமைச்சர் டி.ஆர் பாலு, ஜெயந்தி நடராஜன் ஆகியோர் அழைத்துவந்தனர். பிரதீபா பாட்டீல் வந்ததும் காரைவிட்டு இறங்கிய கருணாநிதி, அவரை வரவேற்று மேடைக்கு அழைத்து வந்தார்.

மேடையில் கருணாநிதிக்கும் பிரதீபாவுக்கும் மட்டுமே ஸீட் போட்டிருந்தார்கள்.

மேடைக்குப் பக்கத்தில் இருந்த சிறிய மேடையில் முன்வரிசையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அமர வைக்கப்பட்டனர். பின்வரிசையில் ஸ்டாலின், கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், பிரதீபாவின் உறவினர்கள் ஆகியோர் அமர்ந்திருந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பெண்கள் வந்திருந்தார்கள். தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள் என்று கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த பெண்கள் எல்லோரும் பேரணியில் திரண்டு வந்திருந்தனர். ஆனால் பா.ம.க-வினர் பெரிய அளவில் கலந்து கொள்ளவில்லை.

பிரதீபா பிரசாரத்தில் கூட்டணி குழப்பங்கள்!

‘தமிழகத்தில் தொழிற்கல்விக் கட்டணத்தைக் குறைக்காவிட்டால் எம்.பி., எம்.எல்.ஏ-க்களுடன் கோட்டை முன்பு போராட்டம் நடத்துவேன்’ என்று சில நாட்களுக்கு முன்புதான் ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார். உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, ‘மத்திய சுகாதாரத் துறையை எதிர்த்துப் போராடத் தயாரா?’ என்று பதிலடி கொடுத்தார். இருவரும் மாறிமாறி அறிக்கை யுத்தம் நடத்தினர். இதைத் தொடர்ந்துதான் ஊர்வலத்தில் பா.ம.க-வினர் கலந்துகொள்ளவில்லை என்ற பேச்சு அடிபட்டது. ஊர்வலத்தை அமைச்சர் பொன்முடி வர்ணனை செய்து கொண்டிருந்தார். அவர் அருகில் அமர்ந்து, சலனமே இல்லாமல் ஊர்வலத்தைப் பார்வையிட்டார் ராமதாஸ்.

ஊர்வலத்தில் புதிய எம்.பி-யான கனிமொழி, அவரது தாயார் ராசாத்தி

பிரதீபா பிரசாரத்தில் கூட்டணி குழப்பங்கள்!

அம்மாள், விஜயா தாயன்பன், சற்குணபாண்டியன் ஆகியோர் வந்தார்கள். மேடை அருகே வந்ததும், அவர்கள் மேடைக்குப் பக்கத்தில் ஓரமாக நின்றுகொண்டார்கள். ராசாத்தி அம்மாள் மட்டும் மேடைக்குப் போனார். பிரதீபாவுக்கு சால்வை போட்டார். ராசாத்தியம்மாளை மேடைக்கு அருகில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அமர்ந்திருந்த சிறிய மேடைக்குப் போய் அமரச் சொன்னார்கள். ஆனால், கருணாநிதி, பிரதீபா ஆகியோர் அமர்ந்திருந்த மேடையிலேயே ஸீட் போடச் சொல்லி உட்கார்ந்துகொண்டார்.

ஊர்வலத்தில் வந்த பெண்கள் எல்லோரும் கனிமொழியைப் பார்த்து உற்சாகக் குரலெழுப்ப... அவரும் பதிலுக்குக் கையசைத்து மகிழ்ந்தார்.

எழுதிவைத்த உரையை

பிரதீபா பிரசாரத்தில் கூட்டணி குழப்பங்கள்!

ப் படித்த பிரதீபா பாட்டீல், ‘‘குடியரசுத் தேர்தல் பிரசாரத்தை சென்னையிலிருந்து தொடங்குவதை நான் பெருமையாக நினைக்கிறேன். பெண்களின் அதிகார மேம்பாட்டுக்காகப் பல பொறுப்பு களில் பணியாற்றி இருக்கிறேன். ஜனாதிபதி பதவிக்கான பொறுப்புகளை நான் நன்கறிவேன்’’ என்றார்.

அடுத்துப் பேசிய கருணாநிதி, ‘‘பிரதீபா பேசும்போது ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி சொன்னார். அந்த நன்றி வெறும் வார்த்தை அளவில் இல்லாமல், எதிர்காலத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு கிடைக்க உதவுவதாகவும் இருக்க வேண்டும்’’ என்றார்.

ஊர்வலம் முடிந்த பிறகு தாஜ் கொரமாண்டல் ஹோட்டலில் பிரதீபாவுக்கு விருந்து ஏற்பாடு செய்திருந்தார் கருணாநிதி. இங்கேயே பிரதீபா பிரசாரத்தைத்

பிரதீபா பிரசாரத்தில் கூட்டணி குழப்பங்கள்!

தொடங்குவதற்காக தி.மு.க. கூட்டணிக் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் அழைக்கப்பட்டிருந்தனர். விழா மேடையில் கருணாநிதி, பிரதீபா ஆகியோருடன் எல்.கணேசன், வரதராஜன், முஸ்லிம் லீக் எம்.பி-யான அகமது, கிருஷ்ணசாமி, வீரப்ப மொய்லி, ஜி.கே.வாசன் ஆகியோர் அமரவைக்கப்பட்டனர். ராமதாஸ் ஆப்சென்ட். ஊர்வலத்தில் கலந்துகொள்ளாத ஜி.கே.வாசன், விருந்தில் கலந்துகொண்டார். அவருடைய ஆதரவாளர்கள் நிறைய பேர் எம்.பி-க்களாகவும் எம்.எல்.ஏ-க்களாகவும் இருப்பதாலோ என்னவோ, கிருஷ்ணசாமியோடு அவரும் மேடையில் அமரவைக்கப்பட்டிருந்தார் என்று சிலர் பேசிக்கொண்டார்கள்.

டெயில் பீஸ்: மே 9, மதுரை சம்பவத்துக்கு பிறகு கருவாகி உருவான ‘கலைஞர் டி.வி’, ஆகஸ்ட் 15-ம்தேதி ஒளிபரப்பைத் துவக்கும் என்ற பேச்சிருக்க... ‘செப்டம்பர் 15 முதல்’ என்று அறிஞர் அண்ணா பிறந்தநாளை மனதில் கொண்டு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த டி.வி-க்கான மாடர்ன் சூரியன் படம் கொண்ட லோகோவுடன் வந்திருந்த வேன் ஒன்று, பேரணி நிகழ்ச்சிகளை கனகாரியமாகப் பதிவு செய்து கொண்டிருந்தது.

- எம்.பரக்கத் அலி
படங்கள்: சு.குமரேசன்

Comments

Popular posts from this blog

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா

விழுப்புரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. செஞ்சி தொகுதி செஞ்சி தாலுக்கா (பகுதி) எடப்பட்டு, வைலாமூர் (மேல்), தேப்பிராம்பட்டு, நந்திபுரம், பருத்திபுரம், பெரியநொளம்பை, பின்னனூர், கம்மந்தாங்கல், தேவந்தாவடி, கைவிடந்தாங்கல், மோடிப்பட்டு, பெருவளூர், மரக்கோணம், மேல் நெமிலி, சின்ன நொளம்பை, எய்யில், மேல் சேவலாம்பாடி, உண்ணமாந்தல், நாரணமங்கலம், தாழன்குன்றம், பரையன்பட்டு , கப்ளாம்பாடி, கோட்டைப்பூண்டி, சங்கிலிக்குப்பம், பறையன்தாங்கல், பழம்பூண்டி, சிந்தகம்பூண்டி, கீழவம்பூண்டி, கூடுவாம்பூண்டி, பாப்பந்தாங்கல், சொக்கம்பாலம், சேவலாம்பாடி கீழ், மேல்கரணை, வடவெட்டி, அருக்கம்பூண்டி, சாத்தாம்பாடி, சிறுதலைப்பூண்டி, கொடுக்கன்குப்பம், சிந்திப்பட்டு, நொச்சலூர், குந்தலம்பட்டு, கொடம்பாடி, வடுகன்பூண்டி, கடப்பனந்தல், அவலூர்பேட்டை, கோவில்பொறையூர், தாயனூர், மேல்மலையனூர், வளத்தி, தேவனூர், கங்கபுரம், சித்தேரி, சமத்தன்குப்பம், அன்னமங்கலம், சாத்தனந்தல், கன்னலம், சாத்தப்புத்தூர், மேல்மாம்பட்டு, தொரப்பாடி, சீயப்பூண்டி, மானந்தல், மேல்புதுப்பட்டு, வடபாலை, ஈயக்குன்னம், ஏம்பலம், துரிஞ்சிப்பூண்டி, மேல்மண்ணூர், பொற்குணம், கடலி, மாவனந்தல், வணக்கம்பாடி, மேலச்சேரி, செவல