இ ந்திய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா, தமிழக முதல்வர் கருணாநிதி என்று மேடையில் முப் பெரும் அரசியல் தலைகள் சேர்ந்திருக்க... தமிழகத்தின் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை வளாகத் திறப்பு விழா, ஜம்மென்று நடந்து முடிந் திருக்கிறது..! மொத்தம் இரண்டு பிளாக்கு கள் கொண்டது இந்த வளாகம். சட்டசபைக்கு ஒன்று... தலைமைச் செயலகத்துக்கு ஒன்று! இதில் சட்டசபை கட்டட வளாகத்தில்தான் விழா. வெளியே நீட்டியபடி இருந்த கம்பிகளும், சிமென்ட் பூச்சு இல்லாத சுவர்களும் 'இன்னும் வேலை முடியவில்லை' என்பதை சொல்லிக் கொண்டே இருந்தன. சில இடங்களில் துணி களைக் கட்டி மறைத்திருந்தார்கள். 'புதிய சட்டசபை திறப்பு விழாவுக்குப் புறப்பட்டு வா...' என்று உடன்பிறப்புக்கு கருணாநிதி கடிதம் எழுதி அழைத்திருக்க... ஏராளமான தொண்டர்கள் குவிந்துவிட்டனர். ஆனால், பிரதமர் வருகையால் அவர்களை போலீஸ் உள்ளே விடாமல் விரட்டியது. உடன் பிறப்புகள் உஷ்ணம் காட்டியும், காக்கிகள் அசரவில்லை! மேடையே பிரமாண்ட செட் போல போடப்பட்டிருக்க... மேடைக்கு முன்பு நீதிபதிகள், மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.எல்.ஏ-...
பத்திரிகைகளில் எழுதிய படைப்புகள்