Skip to main content

Posts

Showing posts from August, 2010

பாராளுமன்ற தொகுதி வாரியாக சட்டமன்ற தொகுதிகள்

இந்தியா முழுவதும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. பாராளுமன்ற தொகுதிகள் வாரியாக தமிழக சட்டமன்ற தொகுதிகள் ப‌ட்டிய‌ல் இங்கே... 1. திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற தொகுதி 1. கும்மிடிப்பூண்டி 2. பொன்னேரி (தனி) 3. திருவள்ளூர் 4. பூந்தமல்லி (தனி) 5. ஆவடி 6. மாதவரம்

தி.மு.க.வில் சேர்ந்தார் சி.பி.எம். எம்.எல்.ஏ. கோவிந்தசாமி

திருப்பூர் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி தமிழக அரசு பாராட்டு விழா எடுக்க போவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அதைத் தொடர்ந்து அவர் அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் கோவிந்தசாமி இன்று (ஆகஸ்ட் 25) முதல்வர் கருணாநிதி முன்பு தி.மு.க.வில் இணைந்தார். இந்த இணைப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

ச‌ட்ட‌ச‌பைக்கு வ‌ராம‌ல் ஓடி ஒளிந்த‌வ‌ர்தான் க‌ருணாநிதி: ஜெய‌ல‌லிதா

ஜெய‌ல‌லிதா இன்று (ஆக‌ஸ்ட் 25) வெளியிட்ட அறிக்கை: மாநில தலைமை தகவல் ஆணையரை தேர்ந்து எடுக்கும் கூட்டத்தில் நான் கலந்து கொள்ளாதது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற அளவில் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி பேட்டி அளித்து இருப்பதை பார்க்கும் போது, ‘முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல்’ என்ற பழமொழிதான் என் நினைவிற்கு வருகிறது. உண்மை நிலை என்னவென்றால், புதிய மாநில தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்யும் கூட்டத்தில் நியமனக் குழு உறுப்பினர் என்ற முறையில் எதிர்க்கட்சித் தலைவராகிய எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பினை ஏற்று கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்று நான் எண்ணியிருந்தேன்.

ச‌ட்ட‌ச‌பைத் தேர்த‌ல்: ஜெய‌ல‌லிதா ஆலோசனை

அடுத்த‌ ஆண்டு ந‌டைபெறும் ச‌ட்ட‌ச‌பைத் தேர்த‌லுக்கு அ.தி.மு.க. இப்போதே தயாராகி வருகிறது. இன்று (ஆகஸ்ட் 24) ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் அ.தி.மு.க. மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்றப் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தேர்தல் “கவுண்ட் டவுன்”: ஜெவுக்கு கருணாநிதி பதில்

தி.மு.க‌. எம்.பி.க‌ள் கூட்ட‌ம் அறிவால‌ய‌த்தில் இன்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது. கூட்டம் முடிந்து முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும், சர்வ தேச நாடுகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும், ஐ.நா. சபைக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் கூட இலங்கை அதிபர் நிறைவேற்றவில்லை என்று எல்லோரும் சொல்கிற சூழ்நிலையில் மத்திய வெளி உறவுத் துறை செயலாளர் நிருபமா ராவ் அவர்கள் உங்களை வந்து பார்த்தார்கள். அதன் தொடர்ச்சியாக ஏதாவது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா?

ஜெயலலிதா அளித்த இஃப்தார் விருந்து

அ.தி.மு.க. சார்பில் இன்று (ஆகஸ்ட் 18) சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வைகோ, சி.பி.ஐ. தமிழ் மாநில செயலாளர் தா. பாண்டியன். சி.பி.எம்.யை சேர்ந்த என். வரதராஜன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஜவாஹிருல்லாஹ், ஹைதர்அலி, டாக்டர் கிருஷ்ணசாமி, உட்பட பலர் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசியதாவது: