2015 ஏப்ரல் 18 தேதியிட்ட ஜுனியர் விகடனில் எழுதிய கட்டுரை இது ! இது ஓர் அபூர்வமான புகைப்படம்! தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா ஆகிய இருவர் மீதும் இவ்வளவு மீடியா வெளிச்சம் பாய்ந்தது இப்போது அல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு, போயஸ் கார்டனில் கேமரா விழுங்கிய இந்தக் காட்சிக்குத் தனிக் கதை உண்டு. 2007ம் ஆண்டு அகில இந்திய அளவில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் இறங்கினார் ஜெயலலிதா. முலாயம் சிங், சந்திரபாபு நாயுடு, சௌதாலா உட்பட இந்தியாவின் முக்கியத் தலைகளை போயஸ் கார்டனுக்கு அழைத்து விருந்து கொடுத்தார். மூன்றாவது அணிக்கு 'ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி’ என்றெல்லாம் அப்போது பெயர் வைத்தார் ஜெயலலிதா. அரசியல் சூழலில் அந்த அணி காணாமல் போனது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க போயஸ் கார்டன் வந்த சௌதாலாவை ஜெயலலிதா வாசலில் காத்திருந்து வரவேற்றார். அப்போது எடுத்த படம்தான் இது. வெவ்வேறு கட்சிகளை... மாநிலங்களைச் சேர்ந்த ஜெயலலிதாவுக்கும் சௌதாலாவுக்கும் இப்போது ஓர் அரசியல் ஒற்றுமை உண்டு. ஊழல் வழக்கில...
பத்திரிகைகளில் எழுதிய படைப்புகள்