Skip to main content

ஜெயலலிதா அறிக்கையைத் திருத்தக் காரணமானேன்!

ஒரு பத்திரிகையாளனின் டைரி குறிப்புகள்!

அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்.ஜி.ஆரில் பணியாற்றிக் கொண்டிருந்த காலம் அது!


                                                 நமது எம்.ஜி.ஆர் அலுவலகம்

2002 மே 23-ம் தேதி. இரவு 7 மணி. அலுவலக ஃபேக்ஸ் இயந்திரத்தில் வந்து விழுந்த ஜெயலலிதாவின் அறிக்கையை என்னிடம் நீட்டி, ''தலைப்பு வைத்து அனுப்புங்கள்'' என்றார் ஆசிரியர் பாவை சந்திரன் சார்.  'சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் கருணாநிதிக்குத் தொடர்பு' என்பதுதான் ஜெயலலிதா அறிக்கையின் சாரம்சம்.

'கருணாநிதியின் செயல்பாடுகள் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. அவருக்கும் சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கும் தொடர்புகள் இருக்கலாம் எனக் கருதுகிறேன். வீரப்பனைச் சந்திக்கக் கருணாநிதி ரகசியமாக முயல்வதால் அவருடைய நடமாட்டத்தைக் கண்காணிக்க உளவுப் பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறேன். தற்போது கருணாநிதியும், முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் கோவா சென்றிருக்கிறார்கள். ஆனால், அங்கிருந்து அவர்கள் இருவரும் ரகசியமாகப் பெங்களூர் சென்று, வீரப்பனைச் சந்திக்க முயற்சிக்கலாம். நாகப்பா கடத்தலுக்கும், கருணாநிதி, துரைமுருகன் ஆகியோருக்கும் தொடர்பு இருக்கலாம் என்றுகூட நான் சந்தேகப்படுகிறேன். கடந்த 6-ம் தேதி (2002 மே 6) இந்த இரண்டு பேரும் பெங்களூர் சென்றனர். 10-ம் தேதிதான் சென்னை திரும்பினர். இவர்கள் சென்னை திரும்பிய பிறகுதான் நாகப்பா கடத்தப்பட்டிருக்கிறார்' என அந்த அறிக்கையில் சொல்லியிருந்தார் ஜெயலலிதா. 

அந்த அறிக்கையின் இறுதியில், 'துரைமுருகனும், வீரப்பனும் வன்னியர்கள். எனவேதான் இருவருக்கும் வீரப்பனுடன் தொடர்பு இருக்கலாம் என்று கருதுகிறேன்' என முடித்திருந்தார் ஜெயலலிதா. அறிக்கையைப் படித்துவிட்டு, பாவை சந்திரன் சாரிடம், '' 'துரைமுருகனும், வீரப்பனும் வன்னியர்கள்' என்கிற வார்த்தையைத் தவிர்க்கலாம். வீரப்பன் குற்றவாளி என்பதற்காக அவர் சார்ந்திருக்கும் வன்னியர் சமுகத்தையே விமர்சிப்பது போலக் கருத்து வெளிப்படுகிறது. அ.தி.மு.க-வுக்கு இருக்கும் கொஞ்ச வன்னியர்கள் ஆதரவும் சரியலாம். உடனே அறிக்கையைத் திருத்தச் சொல்லுங்கள்'' என்றேன்.

என் கருத்தைப் பாவை சந்திரன் சார் ஏற்றுக் கொண்டார். உடனே, கார்டனுக்கு போன் போட்டார். எதிர்முனையில் ஜெயலலிதாவின் தனி செயலாளர் பூங்குன்றன் பேசினார். ''அம்மா... அவங்க அறைக்குச் சென்றுவிட்டார்கள். தகவலைச் சேர்ப்பது கஷ்டம் சார்'' என்றார்.  ஜெயலலிதாவின் அறிக்கை காலை நாளிதழ்களில் வந்துவிடும் எனப் பதறிய பாவை சந்திரன் சார், ''அவசரம் எனச் சொல்லுங்கள்'' என பூங்குன்றனிடம் சொன்னார்.

                                                         ஜெயலலிதாவுடன்

போயஸ் கார்டனுக்கு பக்கத்து பில்டிங்கில்தான் ஜெயா டிவி அலுவலகம் இயங்கிக் கொண்டிருந்தது. அதன் ஆசிரியராக சுனில் சார் இருந்தார். அவரிடம் பாவை சந்திரன் சார் தொலைப்பேசியில் பேசி விஷயத்தைச் சொன்னார். ஜெயலலிதா வீட்டுக்கும் ஜெயா டிவி-க்கும் இன்டர்காம் வசதி இருந்தது. சுனில் சார், பூங்குன்றனிடம் பேசி ''மேடத்தை சந்திக்க வேண்டும். அவசரம்'' என்றார். அப்போது இரவு 8 மணியைத் தாண்டிவிட்டதால், அவருடைய அறைக்கு ஜெயலலிதா படுக்கச் சென்றுவிடுவார். அதன்பிறகு அவரை யாரும் சொந்தரவு செய்ய முடியாது. அதனால், பூங்குன்றன் ஜெயலலிதாவைச் சந்திக்கத் தயங்கினார். ஒருவழியாக ஜெயலலிதாவிடம் போய் நின்ற பூங்குன்றன், ''சுனில் சார் உங்களை அவசரமாகப் பார்க்க வேண்டும் என்கிறார். பாவை சந்திரன் சாரும் முக்கியமான விஷயம் பற்றிப் பேச வேண்டும் எனச் சொன்னார்'' என்றார். ''சுனிலை இன்டர்காமில் பேசச் சொல்லுங்கள்'' என ஜெயலலிதா சொல்ல... உடனே சுனில் ஜெயலலிதாவிடம் விஷயத்தைச் சொன்னார்.

''நான் அறிக்கையைப் படித்தபோதுகூட இந்த விஷயம் கண்ணில் படவில்லை. அறிக்கையைத் திருத்தி அனுப்புகிறேன். திருத்தப்பட்ட அறிக்கை வருகிறது எனப் பத்திரிகைகளுக்கு உடனே தெரிவித்துவிடுங்கள்'' என்றார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவை யாரும் நெருங்க முடியாது. அவர் ஆலோசனைகளைக் கேட்க மாட்டார் என்கிற மாயை கட்டமைத்து இருந்தார்கள். அவை பொய் என எனக்குப் புரிந்து தினம் அது.

அடுத்த நாள் ஒரு பத்திரிகையைத் தவிர மற்ற பத்திரிகைகளில் ஜெயலலிதாவின் திருத்தப்பட்ட அறிக்கை வெளியானது. ஜெயலலிதா அறிக்கையைத் திருத்தக் காரணமானேன்! 

Comments

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி...

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.