Skip to main content

ஜெயலலிதா... டாஸ்மாக்... மதுவிலக்கு... படிப்படியாக!

ஜெயலலிதா... டாஸ்மாக்... மதுவிலக்கு... படிப்படியாக!

ஜெயலலிதா... டாஸ்மாக்... மதுவிலக்கு... படிப்படியாக!
ஜெயலலிதா... டாஸ்மாக்... மதுவிலக்கு... படிப்படியாக!
2015 ஏப்ரல் 20 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது!

‘‘பூரண மதுவிலக்குதான்  . எப்பொழுதும் நான் கொண்டுள்ள கொள்கை. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தவுடன், மதுவிலக்குப் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும்.’’ - சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதாவின் புதிய முழக்கம் இது. மதுவிலக்கு திகில்தான் இப்படி வார்த்தைகளாக வந்துவிழுந்திருக்கின்றன.

‘‘டாஸ்மாக் கடைகளின் நேரம் முதலில் குறைக்கப்படும். பிறகு கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். பின்னர் பார்கள் மூடப்படும். குடிகாரர்களை மீட்பதற்கு மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும்’’ என்றெல்லாம் கலர் மத்தாப்புகளைக் கொளுத்திப் போட்டிருக்கிறார் ஜெயலலிதா. ஐந்தாண்டுகள் சும்மா இருந்த அம்மாவின் தேர்தல் வாக்குறுதி பலிக்குமா? பல் இளிக்குமா?

‘‘கேளுங்கள் வாக்காளப் பெருமக்களே, உண்மையைக் கேளுங்கள். வரலாறு மக்களுக்குத் தெரியாது என்று கருணாநிதி நினைக்கிறாரா? நடந்த பழைய வரலாறுகளை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறார்களா?’’ - இதுவும் தீவுத்திடல் முழக்கம்தான். மதுவிலக்குக்காக இந்த ஆட்சி காட்டிய அக்கறையின் வரலாற்றை பார்ப்போம்.

டாஸ்மாக்கிற்கு பிள்ளையார் சுழி!
1991, 2001 மற்றும் 2011 என மூன்று முறை ஆட்சிக் கட்டிலில் தமிழக மக்கள் ஜெயலலிதாவை அமர வைத்தார்கள். அப்போதெல்லாம் ‘மதுவிலக்கு’ பற்றி சிந்திக்காமல் இப்போது ‘தேர்தல் போதி மர’த்தில் ஞானோதயம் பெற்றிருக்கிறார் ஜெயலலிதா. தனியார் விற்று வந்த சில்லறை மது விற்பனையை மாற்றி அரசே நடத்தும் டாஸ்மாக் கடைகளை 2003-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி முந்தைய அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஜெயலலிதாதான் கொண்டு வந்தார்.
ஜெயலலிதா... டாஸ்மாக்... மதுவிலக்கு... படிப்படியாக!
எலைட் ஷாப் டு ஹைவேஸ் ஷாப்!
நவீன வசதிகள் கொண்ட எலைட் கடைகள் அ.தி.மு.க. ஆட்சியில்தான் கடை விரிக்கப்பட்டன. ‘விபத்துக்களைத் தடுக்க நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மதுக்கடைகளை அகற்ற மறுத்தார்கள். சுப்ரீம் கோர்ட் வரை அப்பீலுக்குப் போன பிறகுதான் சில மதுக்கடைகள் மூடப்பட்டன.

59 முறை அரஸ்ட்!


மதுக் கடைகளை மூடச் சொல்லி ஊர் ஊராகப் போராட்டம் நடத்திய சட்டக் கல்லூரி மாணவி நந்தினியை காக்கிகள் கூட்டம் ஒடுக்கியது. அவர் எங்கு சென்றாலும் அவரைப் பின் தொடர்ந்து போனது போலீஸ் படை. நந்தினி 59 முறையும் அவரது தந்தை ஆனந்தன் 63 முறையும் கைதானார்கள். மதுவிலக்குக் கேட்டுப் போராட்டம் நடத்திய ராமதாஸையும் உள்ளே தூக்கிப் போட்டார்கள்.
ஜெயலலிதா... டாஸ்மாக்... மதுவிலக்கு... படிப்படியாக!
டோல்ஃப்ரீ நம்பர்!

போலி மதுபானம் விற்கப்பட்டு அதனால் அரசின் டாஸ்மாக் வருவாய் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக போலி மதுபானம் பற்றி தகவல்களை தெரிவிக்க 10581 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி சேவை 24.07.2013-ல் ஆரம்பித்தது அ.தி.மு.க. ஆட்சியில்தான். பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகளை மூட வேண்டும் என்கிற கோரிக்கை குப்பைத் தொட்டிக்குப் போனது.
படத்தை க்ளிக் செய்யவும்
ஜெயலலிதா... டாஸ்மாக்... மதுவிலக்கு... படிப்படியாக!
சசிபெருமாள் மரணம்!

மதுவிலக்குக்காகத் தொடர்ந்து போராடி வந்தார் காந்தியவாதி சசிபெருமாள். 2014-ல் வள்ளுவர் கோட்டத்தில், முழு மதுவிலக்குக் கோரி 36 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அப்போதெல்லாம் ‘படிப்படியாக’கூட அரசு படியவில்லை. கன்னியாகுமரி உண்ணாமலையில் பள்ளிக் கூடங்களுக்குப் பக்கத்தில் இருந்த டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி செல்போன் டவரின் உச்சியில் ஏறிப் போராட்டம் நடத்திய போது அவர் உயிரைவிட்டார். உச்சாணியில் இருந்த ஆட்சியாளர்கள் ‘உச்’க்கூட சொல்லவில்லை. சசிபெருமாளின் மரணத்தைத் தற்கொலை என கொச்சைப்படுத்தினார்கள்.

கோவன் மீது கோபம்!

‘ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம்’ ‘மூடு டாஸ்மாக்கை மூடு’ எனப் பாடியதற்காக பாடகர் கோவனை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தார்கள். ‘மச்சி ஓப்பன் தி பாட்டல்’ பாடல் இடம்பெற்ற படத்துக்கு வரிவிலக்கு. மது ஒழிப்பு மாநாட்டில் பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது தேசத் துரோக வழக்குகள் பதியப்பட்டன.
ஜெயலலிதா... டாஸ்மாக்... மதுவிலக்கு... படிப்படியாக!
மதுவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள். ஒரு மாதத்துக்கும் மேலாக சிறையில் அடைத்தது அரசு. டாஸ்மாக் கடைகளை எல்லாம் காக்கிகள் காவல் காத்தன. திருவண்ணாமலையில் இளைஞர்கள், நான்கு வயதுச் சிறுவனுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்த கொடூரம் வாட்ஸ்அப், ஃபேஸ் புக்கில் அதிர்வலைகளை உண்டாக்கியது. கோவையில் பிளஸ் டூ மாணவி குடித்துவிட்டுப் போதையில் ரோட்டில் விழுந்து கிடந்தது, திருசெங்கோட்டில் அரசுப் பள்ளியிலேயே மாணவிகள் மது அருந்தியது, கரூர் பஸ் ஸ்டாப்பில் பள்ளிச்சீருடை அணிந்த நிலையில் மாணவர் போதையில் மயங்கி கிடந்தது எல்லாம் அம்மா ஆட்சியின் மணிமகுடங்கள்.

விசுவநாதனின் விசுவாசம்!

‘‘மதுவிலக்கை அமல்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை. கள்ளச்சாராயம் பெருகும். அரசுக்கு வருமானம் பாதிக்கும். அண்டை மாநிலங்களுக்குச் சென்று குடிப்பார்கள்’’ இதெல்லாம் சொன்னது அசாம் அமைச்சர் அல்ல. நம்ம அமைச்சர் நத்தம் விசுவநாதன் கடந்த ஜனவரியில் நடந்த சட்டசபையில் சொன்னது. இரண்டு மாதங்களில் இப்போது ‘படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவோம்’ என சொல்கிறாரே முதலைமைச்சர். இதுல எதுங்க உண்மை? ‘‘மதுவிலக்குக் கொள்கையை மத்திய அரசு இந்தியா முழுவதும் கொண்டு வந்தால் நாங்கள் ஆதரிக்கிறோம்’’ என சொன்னார் நத்தம் விசுவநாதன். ஆனால் அம்மா “படிப்படியாகக் கொண்டு வருவோம்” என்கிறார்.

டாஸ்மாக்... டார்கெட்!

2001-06 அ.தி.மு.க. ஆட்சியைவிட 2006-11 தி.மு.க. ஆட்சியில் மது விற்பனை 109 சதவிகிதம் அதிகரித்ததாகவும், ஆனால், இப்போது குறைந்து விட்டதாகவும் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. ஓவ்வொரு ஆண்டும் கிடைத்த வருவாய் புள்ளிவிவரத்தை பார்த்தால் அவர் உண்மை புரியும். முந்தைய தி.மு.க ஆட்சியில் சராசரியாக ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் அளவுக்குத்தான் டாஸ்மாக் வருவாய் உயர்ந்தது. ஜெயலலிதா ஆட்சியில், ஆண்டுக்கு 3,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் உயர்ந்துகொண்டிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 1.90 லட்சம் கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

‘‘உண்மை எப்படி நம்பிக்கையைக் கொடுக்கிறதோ, உழைப்பு எப்படி வசதியைக் கொடுக்கிறதோ, திறமை எப்படி வெற்றியைக் கொடுக்கிறதோ, அது போல எனது ஆட்சி உங்களுக்கு வசந்தத்தைக் கொடுத்து இருக்கிறது’’ - இதுவும் தீவுத்திடலில் அம்மா சொன்ன பஞ்ச் வசனங்கள்.
-எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

Comments

Popular posts from this blog

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சி...

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்.. 1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி 1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி) 2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி 3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி) 4. காங்கேயம் - மாதவரம் 5. நத்தம் - திருவள்ளூர் 6. வெள்ளைக்கோவில் - ஆவடி * புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது. * ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது. * புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.