ஜெயலலிதா இன்று (அக்டோபர் 27) வெளியிட்ட அறிக்கை:
தி.மு.க. அரசினுடைய அமைச்சர்களின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது, சட்டம்-ஒழுங்கை காக்கக்கூடிய அரசாக இல்லாமல், சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கக்கூடிய அரசாக தி.மு.க. அரசு விளங்குகிறது என்பது தெளிவாகிறது.
சேலம், தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளர் குப்புராஜ் உட்பட அவரது குடும்பத்தினர் ஆறு பேர் சொத்து தகராறு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை வழக்கை விசாரித்து வந்த மாநில குற்றப் புலனாய்வுத் துறை, சேலம் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவரும், பனமரத்துப்பட்டி தி.மு.க. ஒன்றியச் செயலாளரும், வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனுமான பாரப்பட்டி சுரேஷ்குமாருக்கு தொடர்பு இருப்பதாகக் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில், அவரை கைது செய்தது. இந்த வழக்கில் இவருடன் சேர்த்து, தி.மு.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் சம்பத், அம்மாபாளையத்தைச் சேர்ந்த செந்தில் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க சேலம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், ஆறு பேரின் கொடூரக் கொலைக்கு காரணமான சுரேஷ்குமாரை, வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சைரன் பொருத்தப்பட்ட, தேசிய கொடி கட்டப்பட்ட அரசு வாகனத்தில் சேலம் மத்திய சிறைச்சாலைக்கு சென்று சந்தித்து ஆறுதல் வார்த்தை கூறி இருக்கிறார். இவரைத் தொடர்ந்து தி.மு.க.வைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆதி சங்கர், தலைவாசல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, சேலம் மாநகர மேயர் உட்பட பலர் கொலையாளி சுரேஷ்குமாரை நேரில் சந்தித்து ஆறுதல் வார்த்தை கூறியுள்ளனர். கொலைக் குற்றவாளிக்கு ஆதரவாக நடந்து கொண்டுள்ள அமைச்சருக்கும், மேயருக்கும், இதர தி.மு.க.வினருக்கும், சட்டம்-ஒழுங்கை காக்க வேண்டிய பொறுப்பில் இருந்து கொண்டு, இதை எல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதிக்கும் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள இந்திய சாசனத்திற்கு நம்பிக்கையுடனும், நாணயத்துடனும் நடந்து கொள்வேன் ...” என்றும், “விருப்பு வெறுப்பின்றியும், அச்சம் பாரபட்சம் இன்றியும் மக்கள் நலன் காக்கப் பாடுபடுவேன்” என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஓர் அமைச்சர், கொலைக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஒருவரை சிறையில் சென்று பார்ப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. மாநில அமைச்சரின் இது போன்ற செயல் புலன் விசாரணைக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அமைச்சரின் இந்த நடவடிக்கையின் மூலம், உண்மையான குற்றவாளியை அரசு தப்ப வைத்துவிடுமோ என்ற சந்தேகம் தற்போது மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்ற பழமொழிக்கேற்ப, இந்த சம்பவத்தை வைத்தே பொதுமக்களின் நிலங்களை ஆங்காங்கே தி.மு.க.வினர் அபகரிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டில் உள்ள உண்மையை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
இதே போன்று, மைனாரிட்டி தி.மு.க. அரசின் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக இருக்கும் தா.மோ. அன்பரசன் சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் “காஞ்சிபுரம் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் ஊருக்கு ஒருவர் உள்ளார்.நாங்கள் நினைத்தால், நீங்கள் கூட்டம் போட முடியுமா? அடக்கி வாசியுங்கள் ... இல்லை என்றால் தெருவில் நடமாட முடியாது ... ஜாக்கிரதை” என்று மிரட்டும் தொனியில் பேசி இருக்கிறார். “வாழ்க வசவாளர்கள்” என்ற அண்ணாவின் கொள்கையை பின்பற்றுங்கள் என்று சில நாட்களுக்கு முன்பு கருணாநிதி கூறியதற்கு இது தான் பொருள் போலிருக்கிறது.
தன் தலைவரின் உள் மனது அறிந்து செயல்படும் அமைச்சர், ஓர் ரவுடி போல் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் ரவுடிக் கும்பலின் ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.சட்டம்-ஒழுங்கு காக்கப்பட வேண்டும், உண்மையான குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்ற அக்கறை கருணாநிதிக்கு இருந்தால், உடனடியாக சேலம் கொலை வழக்கை மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கவும்; கொலைக் குற்றவாளியை சேலம் சிறைச்சாலையில் சந்தித்த வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் ரவுடி போல் கம்யூனிஸ்ட் தோழர்களை மிரட்டிய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அன்பரசன் ஆகிய இருவரையும் அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை முதலமைச்சர் கருணாநிதி செய்யவில்லை என்றால், சட்டம்-ஒழுங்கைக் காக்க கருணாநிதிக்கு விருப்பமில்லை என்ற அடிப்படையிலே தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்து, தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Comments