2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...
2007 ஜூலை 8 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! . பிரதீபா பிரசாரத்தில் கூட்டணி குழப்பங்கள்! ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் பிரதீபா பாட்டீல், தன் பிரசாரத்தைத் தமிழகத்தில் இருந்து தொடங்கியிருக்கிறார். பிரதீபா பாட்டீலை ஆதரித்து சென்னையில் தி.மு.க. கூட்டணி சார்பில் மகளிர் பேரணியும் நடந்து முடிந்திருக்கிறது. ஜூலை 1-ம் தேதி அண்ணா சாலை மன்றோ சிலையில் இருந்து சேப்பாக்கம் வரையில் நடந்த இந்தப் பிரமாண்ட பேரணிக்கு, மதியத்தில் இருந்தே பெண்கள் குவிய ஆரம்பித்துவிட்டனர். ஊர்வலத்தை பிரதீபா பாட்டீல் பார்வையிடுவதற்காக, சிம்சன் அருகே ஒரு ஸ்பெஷல் மேடை அமைத்திருந்தார்கள். ‘ராஷ்டிரபதி பவன்’ மாடலில் அந்த மேடையை அமைக்க ஐடியா கொடுத்தது கருணாநிதிதானாம். இந்த மேடையை முந்தின நாள் இரவு வந்து பார்வையிட்டார் கருணாநிதி. ராஷ்டிரபதி பவன் மாடலின் கோபுரத்தில் கருணாநிதிக்குப் பிடித்த மஞ்சள்(!) நிறத்தில் கொடி பறந்து கொண்டிருந்தது. சரியாக மாலை 4.50-க்குக் கருணாநிதியின் கார் மேடை அருகே வந்து நின்றது. உடனே இறங்காமல் சிறிது நேரம் காரிலேயே காத்திருந்தார் கருணாநிதி. அடுத்த சில வின...