ஒரு பத்திரிகையாளனின் டைரி குறிப்புகள்! அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்.ஜி.ஆரில் பணியாற்றிக் கொண்டிருந்த காலம் அது! நமது எம்.ஜி.ஆர் அலுவலகம் 2002 மே 23-ம் தேதி. இரவு 7 மணி. அலுவலக ஃபேக்ஸ் இயந்திரத்தில் வந்து விழுந்த ஜெயலலிதாவின் அறிக்கையை என்னிடம் நீட்டி, ''தலைப்பு வைத்து அனுப்புங்கள்'' என்றார் ஆசிரியர் பாவை சந்திரன் சார். 'சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் கருணாநிதிக்குத் தொடர்பு' என்பதுதான் ஜெயலலிதா அறிக்கையின் சாரம்சம். 'கருணாநிதியின் செயல்பாடுகள் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. அவருக்கும் சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கும் தொடர்புகள் இருக்கலாம் எனக் கருதுகிறேன். வீரப்பனைச் சந்திக்கக் கருணாநிதி ரகசியமாக முயல்வதால் அவருடைய நடமாட்டத்தைக் கண்காணிக்க உளவுப் பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறேன். தற்போது கருணாநிதியும், முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் கோவா சென்றிருக்கிறார்கள். ஆனால், அங்கிர...
பத்திரிகைகளில் எழுதிய படைப்புகள்