2012 செப்டம்பர் 5 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! த மிழகத்தில் 10 தகவல் ஆணையர்கள் இருக்க வேண்டிய இடத்தில் மூன்று பேர் மட்டுமே இருக்கிறார்கள். ஏன் மற்றவர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை என்று கேட்டால், சொல்லப்படும் காரணம் விஜயகாந்த்! அரசு அலுவலங்களில் ஒளிவு மறைவு இல்லாத செயல்பாடும் ஊழல் இல்லாத நிர்வாகமும் நடக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்தச் சட்டத்தின்படி தகவல்கள் கேட்டு கிடைக்காமல் போனால் மேல் முறையீடு செய்யலாம். மேல் முறையீடும் மறுக்கப்படும் பட்சத்தில் தகவல் ஆணையத்தில் முறையிடலாம். இதற்காகவே இந்திய அளவில் மத்தியத் தகவல் ஆணையமும் மாநில அளவில் மாநிலத் தகவல் ஆணையங்களும் செயல்பட்டு வருகின்றன. தகவல் தரவில்லை என்றால், அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க தகவல் ஆணையங்களுக்கு அதிகாரம் உண்டு. இந்த ஆணையத்தில் காலியாக உள்ள இடங்களில் ஆணையர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி வழக்குப் போட்டிருக்கிறார் 'நீதியின் குரல்’ அமைப்பின் நிறுவனத் தலைவர் சி.ஆர்.பாஸ்கரன். ''...
பத்திரிகைகளில் எழுதிய படைப்புகள்